அதிகாரம்: வாய்மை
Veracity - Vaaimai
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:293

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.


குறள் விளக்கம்
ஒருவன் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக்குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க - ஒருவன் தன் நெஞ்சு அறிவது ஒன்றனைப் பிறர் அறிந்திலர் என்று பொய்யாதொழிக,பொய்த்தபின் தன் நெஞ்சே தன்னைச் சுடும் - பொய்த்த தாயின் அதனை அறிந்த தன் நெஞ்சே அப்பாவத்திற்குக் கரியாய் நின்று, தன்னை அதன் பயனாய துன்பத்தை எய்துவிக்கும். (நெஞ்சு கரியாதல் "கண்டவர் இல்லென உலகத்துள் உணராதார் - தங்காது தகைவின்றித் தாம் செய்யும் வினைகளுள் - நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பவும் மறையாவாம் - நெஞ்சத்திற் குறுகிய கரி இல்லை ஆகலின்" (கலித்.நெய்தல்.8) என்பதனானும் அறிக. பொய் மறையாமையின், அது கூறலாகாது என்பது இதனான் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Thannenj Charivadhu Poiyarka Poiththapin Thannenje Thannaich Chutum

TRANSLATION:
Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.

MEANING IN ENGLISH:
Let not a man knowingly tell a lie; for after he has told the lie, his mind will burn him (with the memory of his guilt).
வாய்மை - MORE KURAL..
குறள்:291 வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.

You ask, in lips of men what 'truth' may be; 'Tis speech from every taint of evil free.
குறள்:292 பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.

Falsehood may take the place of truthful word, If blessing, free from fault, it can afford.
குறள்:293 தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும்.

Speak not a word which false thy own heart knows Self-kindled fire within the false one's spirit glows.
குறள்:294 உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன்.

True to his inmost soul who lives,- enshrined He lives in souls of all mankind.
குறள்:295 மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை.

Greater is he who speaks the truth with full consenting mind. Than men whose lives have penitence and charity combined.
குறள்:296 பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும்.

No praise like that of words from falsehood free; This every virtue yields spontaneously.
குறள்:297 பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று.

If all your life be utter truth, the truth alone, 'Tis well, though other virtuous acts be left undone.
குறள்:298 புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும்.

Outward purity the water will bestow; Inward purity from truth alone will flow.
குறள்:299 எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு.

Every lamp is not a lamp in wise men's sight; That's the lamp with truth's pure radiance bright.
குறள்:300 யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற.

Of all good things we've scanned with studious care, There's nought that can with truthfulness compare.