அதிகாரம்: அருளுடைமை
Compassion - Arulutaimai
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:250

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.


குறள் விளக்கம்
(அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
வலியார் முன் தன்னை நினைக்க - தன்னின் வலியார் தன்னை நலிய வரும்பொழுது அவர்முன் தான் அஞ்சிநிற்கும் நிலையினை நினைக்க, தான் தன்னின்மெலியார்மேல் செல்லுமிடத்து - அருளில்லாதவன் தன்னின் எளியார்மேல் தான் நலியச் செல்லும் பொழுது. ('மெலியார்' எனச் சிறப்புடைய உயர்திணைமேல் கூறினாராயினும், ஏனைய அஃறிணையும் கொள்ளப்படும். அதனை நினைக்கவே, இவ்வுயிர்க்கும் அவ்வாறே அச்சம் ஆம் என்று அறிந்து, அதன்மேல் அருள் உடையன் ஆம் என்பது கருத்து. இதனால் அருள் பிறத்தற்கு உபாயம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Valiyaarmun Thannai Ninaikka Thaan Thannin Meliyaarmel Sellu Mitaththu

TRANSLATION:
When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe.

MEANING IN ENGLISH:
When a man is about to rush upon those who are weaker than himself, let him remember how he has stood (trembling) before those who are stronger than himself.
அருளுடைமை - MORE KURAL..
குறள்:241 அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

Wealth 'mid wealth is wealth 'kindliness'; Wealth of goods the vilest too possess.
குறள்:242 நல்லாற்றாள் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அஃதே துணை.

The law of 'grace' fulfil, by methods good due trial made, Though many systems you explore, this is your only aid.
குறள்:243 அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

They in whose breast a 'gracious kindliness' resides, See not the gruesome world, where darkness drear abides.
குறள்:244 மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை.

Who for undying souls of men provides with gracious zeal, In his own soul the dreaded guilt of sin shall never feel.
குறள்:246 பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார்.

AGain of true wealth oblivious they eschew, Who 'grace' forsake, and graceless actions do
குறள்:247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

As to impoverished men this present world is not; The 'graceless' in you world have neither part nor lot.
குறள்:248 பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது.

Who lose the flower of wealth, when seasons change, again may bloom; Who lose 'benevolence', lose all; nothing can change their doom.
குறள்:249 தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.

When souls unwise true wisdom's mystic vision see, The 'graceless' man may work true works of charity.
குறள்:250 வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து.

When weaker men you front with threat'ning brow, Think how you felt in presence of some stronger foe.