அதிகாரம்: புகழ்
Renown - Pukazh
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:231

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.


குறள் விளக்கம்
வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
'ஈதல்' - வறியார்க்கு ஈக, இசைபட வாழ்தல் - அதனால் புகழ் உண்டாக வாழ்க, அல்லது உயிர்க்கு ஊதியம் இல்லை - அப்புகழ் அல்லது மக்கள் உயிர்க்குப்பயன் பிறிது ஒன்று இல்லை ஆகலான்.(இசைபட வாழ்தற்குக் கல்வி, ஆண்மை முதலிய பிற காரணங்களும் உளவேனும் உணவின் பிண்டம் உண்டி முதற்று (புறநா.18) ஆகலின் ஈதல் சிறந்தது என்பதற்கு ஞாபகமாக 'ஈதல்' என்றார். உயிர்க்கு என்பது, பொதுப்படக் கூறினாரேனும், விலங்கு உயிர்கட்கு ஏலாமையின், மக்கள் உயிர்மேல் நின்றது.)

TRANSLITERATION:
ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல தூதிய மில்லை உயிர்க்கு

TRANSLATION:
See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.

MEANING IN ENGLISH:
Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.
புகழ் - MORE KURAL..
குறள்:231 ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.

See that thy life the praise of generous gifts obtain; Save this for living man exists no real gain.
குறள்:232 உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.

The speech of all that speak agrees to crown The men that give to those that ask, with fair renown.
குறள்:233 ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில்.

Save praise alone that soars on high, Nought lives on earth that shall not die.
குறள்:234 நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.

If men do virtuous deeds by world-wide ample glory crowned, The heavens will cease to laud the sage for other gifts renowned.
குறள்:235 நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

oss that is gain, and death of life's true bliss fulfilled, Are fruits which only wisdom rare can yield.
குறள்:236 தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.

If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face.
குறள்:237 புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

If you your days will spend devoid of goodly fame, When men despise, why blame them? You've yourself to blame.
குறள்:238 வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின்.

Fame is virtue's child, they say; if, then, You childless live, you live the scorn of men.
குறள்:239 வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.

The blameless fruits of fields' increase will dwindle down, If earth the burthen bear of men without renown.
குறள்:240 வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.

Who live without reproach, them living men we deem; Who live without renown, live not, though living men they seem.