அதிகாரம்: நீத்தார் பெருமை
The Greatness of Ascetics - Neeththaar Perumai
குறள் இயல்: பாயிரவியல்
Prologue - Paayiraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.


குறள் விளக்கம்
பிறப்பு வீடு என்பன போல் இரண்டிரண்டாக உள்ளவைகளின் கூறுபாடுகளை ஆராய்ந்தறிந்து அறத்தை மேற்கொண்டவரின் பெருமையே உலகத்தில் உயர்ந்தது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இருமை வகை தெரிந்து - பிறப்பு வீடு என்னும் இரண்டனது துன்ப இன்பக் கூறுபாடுகளை ஆராய்ந்து அறிந்து; ஈண்டு அறம் பூண்டார் பெருமை - அப்பிறப்பு அறுத்தற்கு இப்பிறப்பின்கண் துறவறத்தைப் பூண்டாரது பெருமையே; உலகு பிறங்கிற்று - உலகின்கண் உயர்ந்தது. (தெரிமாண் தமிழ் மும்மைத் தென்னம்பொருப்பன் (பரிபாடல்) என்புழிப் போல, 'இருமை' என்றது ஈண்டு எண்ணின்கண் நின்றது. பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது. இதனால் திகிரி உருட்டி உலகம் முழுது ஆண்ட அரசர் முதலாயினார் பெருமை பிரிக்கப்பட்டது. இவை மூன்று பாட்டானும் நீத்தார் பெருமையே எல்லாப் பெருமையினும் மிக்கது என்பது கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Irumai Vakaidherindhu Eentuaram Poontaar Perumai Pirangitru Ulaku

TRANSLATION:
Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed.

MEANING IN ENGLISH:
The greatness of those who have discovered the properties of both states of being, and renounced the world, shines forth on earth (beyond all others).
நீத்தார் பெருமை - MORE KURAL..
குறள்:22 துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

As counting those that from the earth have passed away, 'Tis vain attempt the might of holy men to say.
குறள்:23 இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு.

Their greatness earth transcends, who, way of both worlds weighed, In this world take their stand, in virtue's robe arrayed.
குறள்:24 உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.

He, who with firmness, curb the five restrains, Is seed for soil of yonder happy plains.
குறள்:25 ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி.

Their might who have destroyed 'the five', shall soothly tell Indra, the lord of those in heaven's wide realms that dwell.
குறள்:26 செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

Things hard in the doing will great men do; Things hard in the doing the mean eschew.
குறள்:27 சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.

Taste, light, touch, sound, and smell: who knows the way Of all the five,- the world submissive owns his sway.
குறள்:28 நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

The might of men whose word is never vain, The 'secret word' shall to the earth proclaim.
குறள்:29 குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.

Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,
குறள்:30 அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

Towards all that breathe, with seemly graciousness adorned they live; And thus to virtue's sons the name of 'Anthanar' men give,