அதிகாரம்: ஈகை
Giving - Eekai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:228

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.


குறள் விளக்கம்
தாம் சேர்த்து வைத்துள்ள பொருளைப் பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்து விடும் வன் கண்மை உடையவர், பிறர்க்கு கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம் உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம் அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல் - வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர் உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக் கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம் என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின், தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து இழவார் என்பது கருத்து.)

TRANSLITERATION:
Eeththuvakkum Inpam Ariyaarkol Thaamutaimai Vaiththizhakkum Vanka Navar

TRANSLATION:
Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.

MEANING IN ENGLISH:
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?.
ஈகை - MORE KURAL..
குறள்:221 வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து.

Call that a gift to needy men thou dost dispense, All else is void of good, seeking for recompense.
குறள்:222 நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று.

Though men declare it heavenward path, yet to receive is ill; Though upper heaven were not, to give is virtue still.
குறள்:224 இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

The suppliants' cry for aid yields scant delight, Until you see his face with grateful gladness bright.
குறள்:225 ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.

'Mid devotees they're great who hunger's pangs sustain, Who hunger's pangs relieve a higher merit gain.
குறள்:226 அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

Let man relieve the wasting hunger men endure; For treasure gained thus finds he treasure-house secure.
குறள்:227 பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.

Whose soul delights with hungry men to share his meal, The hand of hunger's sickness sore shall never feel.
குறள்:228 ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்.

Delight of glad'ning human hearts with gifts do they not know. Men of unpitying eye, who hoard their wealth and lose it so?.
குறள்:229 இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.

They keep their garners full, for self alone the board they spread;- 'Tis greater pain, be sure, than begging daily bread!.
குறள்:230 சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை.

'Tis bitter pain to die, 'Tis worse to live. For him who nothing finds to give!.