அதிகாரம்: ஒப்புரவறிதல்
Duty to Society - Oppuravaridhal
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:216

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.


குறள் விளக்கம்
ஒப்புராவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சேர்ந்தால் அஃது ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற் போன்றது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம் ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம் உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு சிறந்தமையின் அதனையே 'நயன்' என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும் என்பதாம்.)

TRANSLITERATION:
Payanmaram Ulloorp Pazhuththatraal Selvam Nayanutai Yaankan Patin

TRANSLATION:
A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart.

MEANING IN ENGLISH:
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
ஒப்புரவறிதல் - MORE KURAL..
குறள்:212 தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு.

The worthy say, when wealth rewards their toil-spent hours, For uses of beneficence alone 'tis ours.
குறள்:213 புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற.

To 'due beneficence' no equal good we know, Amid the happy gods, or in this world below.
குறள்:214 ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.

Who knows what's human life's befitting grace, He lives; the rest 'mongst dead men have their place.
குறள்:215 ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.

The wealth of men who love the 'fitting way,' the truly wise, Is as when water fills the lake that village needs supplies.
குறள்:216 பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்.

A tree that fruits in th' hamlet's central mart, Is wealth that falls to men of liberal heart.
குறள்:217 மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.

Unfailing tree that healing balm distils from every part, Is ample wealth that falls to him of large and noble heart.
குறள்:218 இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி யவர்.

E'en when resources fall, they weary not of 'kindness due,'- They to whom Duty's self appears in vision true.
குறள்:219 நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.

The kindly-hearted man is poor in this alone, When power of doing deeds of goodness he finds none.
குறள்:220 ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து.

Though by 'beneficence,' the loss of all should come, 'Twere meet man sold himself, and bought it with the sum.