அதிகாரம்: தீவினையச்சம்
Dread of Evil Deeds - Theevinaiyachcham
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:201

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.


குறள் விளக்கம்
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள் அஞ்சார், தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் - முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார் அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர். ('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.)

TRANSLITERATION:
Theevinaiyaar Anjaar Vizhumiyaar Anjuvar Theevinai Ennum Serukku

TRANSLATION:
With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.

MEANING IN ENGLISH:
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
தீவினையச்சம் - MORE KURAL..
குறள்:201 தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.

With sinful act men cease to feel the dread of ill within, The excellent will dread the wanton pride of cherished sin.
குறள்:202 தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.

Since evils new from evils ever grow, Evil than fire works out more dreaded woe.
குறள்:203 அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.

Even to those that hate make no return of ill; So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
குறள்:204 மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு.

Though good thy soul forget, plot not thy neighbour's fall, Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
குறள்:205 இலன்என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.

Make not thy poverty a plea for ill; Thy evil deeds will make thee poorer still.
குறள்:206 தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

What ranks as evil spare to do, if thou would'st shun Affliction sore through ill to thee by others done.
குறள்:207 எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.

From every enmity incurred there is to 'scape, a way; The wrath of evil deeds will dog men's steps, and slay.
குறள்:208 தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அஇஉறைந் தற்று.

Man's shadow dogs his steps where'er he wends; Destruction thus on sinful deeds attends.
குறள்:209 தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.

Beware, if to thyself thyself is dear, Lest thou to aught that ranks as ill draw near!.
குறள்:210 அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

The man, to devious way of sin that never turned aside, From ruin rests secure, whatever ills betide.