அதிகாரம்: புறங்கூறாமை
Not Backbiting - Purangooraamai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:190

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.


குறள் விளக்கம்
அயலாருடைய குற்றத்தைக் காண்பது போல் தம் குற்றத்தையும் காண வல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம் உண்ட‌ோ?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் - ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம் காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும் காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்' என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம், ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார். இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம் கூறப்பட்டது.

TRANSLITERATION:
Edhilaar Kutrampol Thangutrang Kaankirpin Theedhunto Mannum Uyirkku

TRANSLATION:
If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?.

MEANING IN ENGLISH:
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?.
புறங்கூறாமை - MORE KURAL..
குறள்:181 அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது

Though virtuous words his lips speak not, and all his deeds are ill If neighbour he defame not, there's good within him still
குறள்:182 அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

Than he who virtue scorns, and evil deeds performs, more vile, Is he that slanders friend, then meets him with false smile.
குறள்:183 புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூற்றும் ஆக்கத் தரும்.

'Tis greater gain of virtuous good for man to die, Than live to slander absent friend, and falsely praise when nigh.
குறள்:184 கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல்.

In presence though unkindly words you speak, say not In absence words whose ill result exceeds your thought.
குறள்:185 அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.

The slanderous meanness that an absent friend defames, 'This man in words owns virtue, not in heart,' proclaims.
குறள்:186 பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும் திறன்தெரிந்து கூறப் படும்.
திறன்தெரிந்து கூறப் படும்.

Who on his neighbours' sins delights to dwell, The story of his sins, culled out with care, the world will tell
குறள்:188 துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.

Whose nature bids them faults of closest friends proclaim What mercy will they show to other men's good name?.
குறள்:189 அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை.

'Tis charity, I ween, that makes the earth sustain their load. Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
குறள்:190 ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு.

If each his own, as neighbours' faults would scan, Could any evil hap to living man?.