அதிகாரம்: வெஃகாமை
Not Coveting - Veqkaamai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:177

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.


குறள் விளக்கம்
பிறர் பொருளைக் கவர விரும்புவதால் ஆகும் ஆக்கத்தை விரும்பாதிருக்க வேண்டும்; அது பயன் விளைவிக்கும்போது அப்பயன் நன்மையாவது அரிதாகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
வெஃகி ஆம் ஆக்கம் வேண்டற்க - பிறர் பொருளை அவாவிக்கொண்டு அதனால் ஆகின்ற ஆக்கத்தை விரும்பாது ஒழிக; விளைவயின் பயன் மாண்டதற்கு அரிது ஆம் - பின் அனுபவிக்குங்கால் அவ்வாக்கத்தின் பயன் நன்றாதல் இல்லை ஆகலான். ('விளை' என்பது முதல்நிலைத் தொழிற்பெயர். இவை ஏழு பாட்டானும் வெஃகுதலின் குற்றம் கூறப்பட்டது)

TRANSLITERATION:
Ventarka Veqkiyaam Aakkam Vilaivayin Maantar Karidhaam Payan

TRANSLATION:
Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.

MEANING IN ENGLISH:
Desire not the gain of covetousness. In the enjoyment of its fruits there is no glory.
வெஃகாமை - MORE KURAL..
குறள்:171 நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்.

With soul unjust to covet others' well-earned store, Brings ruin to the home, to evil opes the door.
குறள்:172 படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.

Through lust of gain, no deeds that retribution bring, Do they, who shrink with shame from every unjust thing.
குறள்:173 சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்.

No deeds of ill, misled by base desire, Do they, whose souls to other joys aspire.
குறள்:175 அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்.

What gain, though lore refined of amplest reach he learn, His acts towards all mankind if covetous desire to folly turn?.
குறள்:176 அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.

Though, grace desiring, he in virtue's way stand strong, He's lost who wealth desires, and ponders deeds of wrong.
குறள்:177 வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்.

Seek not increase by greed of gain acquired; That fruit matured yields never good desired.
குறள்:178 அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்

What saves prosperity from swift decline? Absence of lust to make another's cherished riches thine!.
குறள்:179 அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு.

Good fortune draws anigh in helpful time of need, To him who, schooled in virtue, guards his soul from greed.
குறள்:180 இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு.

From thoughtless lust of other's goods springs fatal ill, Greatness of soul that covets not shall triumph still.