அதிகாரம்: பொறையுடைமை
The Possession of Patience, Forbearance - Poraiyutaimai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:157

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.


குறள் விளக்கம்
தகுதி அல்லாதவைகளைத் தனக்குப் பிறர் செய்த போதிலும், அதனால், அவர்க்கு வரும் துன்பத்திற்காக நொந்து, அறம் அல்லாதவைகளைச் செய்யாதிருத்தல் நல்லது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் - செய்யத்தகாத கொடியவற்றைத் தன்கண் பிறர் செய்தாராயினும்; நோநொந்து அறன் அல்ல செய்யாமை நன்று - அவர்க்கு அதனால் வரும்துன்பத்திற்கு நொந்து, தான் அறனல்லாத செயல்களைச் செய்யாதிருத்தல் ஒருவனுக்கு நன்று. [உம்மை: சிறப்பு உம்மை. துன்பத்திற்கு நோதலாவது "உம்மை - எரிவாய் நிரயத்து வீழ்வர்கொல்" (நாலடி. 58) என்று பரிதல்.]

TRANSLITERATION:
Thiranalla Tharpirar Seyyinum Nonondhu Aranalla Seyyaamai Nandru

TRANSLATION:
Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep!.

MEANING IN ENGLISH:
Though others inflict injuries on you, yet compassionating the evil (that will come upon them) it will be well not to do them anything contrary to virtue.
பொறையுடைமை - MORE KURAL..
குறள்:151 அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

As earth bears up the men who delve into her breast, To bear with scornful men of virtues is the best.
குறள்:152 பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.

Forgiving trespasses is good always; Forgetting them hath even higher praise;.
குறள்:153 இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.

The sorest poverty is bidding guest unfed depart; The mightiest might to bear with men of foolish heart.
குறள்:155 ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

Who wreak their wrath as worthless are despised; Who patiently forbear as gold are prized.
குறள்:156 ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

Who wreak their wrath have pleasure for a day; Who bear have praise till earth shall pass away.
குறள்:157 திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று.

Though others work thee ill, thus shalt thou blessing reap; Grieve for their sin, thyself from vicious action keep!.
குறள்:158 மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல்.

With overweening pride when men with injuries assail, By thine own righteous dealing shalt thou mightily prevail.
குறள்:159 துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.

They who transgressors' evil words endure With patience, are as stern ascetics pure.
குறள்:160 உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின்.

Though 'great' we deem the men that fast and suffer pain, Who others' bitter words endure, the foremost place obtain.