அதிகாரம்: பிறனில் விழையாமை
Not coveting another's Wife - Piranil Vizhaiyaamai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:144

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.


குறள் விளக்கம்
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
எனைத்துணையர் ஆயினும் என்னாம் - எத்துணைப் பெருமையுடையார் ஆயினும் ஒருவர்க்கு யாதாய் முடியும், தினைத்துணையும் தேரான் பிறன் இல் புகழ் - காம மயக்கத்தால் தினையளவும் தம் பிழையை ஓராது பிறனுடைய இல்லின்கண் புகுதல். (இந்திரன் போல எல்லாப் பெருமையும் இழந்து சிறுமை எய்தல் நோக்கி, 'என்னாம்' என்றார். 'என் நீர் அறியாதீர் போல இவை கூறின் நின் நீர அல்ல நெடுந்தகாய்' (கலித்.பாலை 6) உயர்த்தற்கண் பன்மை ஒருமை மயங்கிற்று. 'தேரான் பிறன்' என்பதனைத் 'தம்மை ஐயுறாத பிறன்' என்று உரைப்பாரும் உளர்.)

TRANSLITERATION:
Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum Theraan Piranil Pukal

TRANSLATION:
How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wife.

MEANING IN ENGLISH:
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?.
பிறனில் விழையாமை - MORE KURAL..
குறள்:142 அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல்.

No fools, of all that stand from virtue's pale shut out, Like those who longing lurk their neighbour's gate without.
குறள்:143 விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்துதொழுகு வார்.

They're numbered with the dead, e'en while they live, -how otherwise? With wife of sure confiding friend who evil things devise.
குறள்:144 எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.

How great soe'er they be, what gain have they of life, Who, not a whit reflecting, seek a neighbour's wife.
குறள்:145 எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி.

'Mere triflel' saying thus, invades the home, so he ensures. A gain of guilt that deathless aye endures.
குறள்:146 பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்.

Who home ivades, from him pass nevermore, Hatred and sin, fear, foul disgrace; these four.
குறள்:147 அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன்.

Who sees the wife, another's own, with no desiring eye In sure domestic bliss he dwelleth ever virtuously.
குறள்:148 பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.

Manly excellence, that looks not on another's wife, Is not virtue merely, 'tis full 'propriety' of life.
குறள்:149 நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்.

Who 're good indeed, on earth begirt by ocean's gruesome tide? The men who touch not her that is another's bride.
குறள்:150 அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று.

Though virtue's bounds he pass, and evil deeds hath wrought; At least, 'tis good if neighbour's wife he covet not.