அதிகாரம்: புலவி
Pouting - Pulavi
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1307

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று


குறள் விளக்கம்
கூடி மயங்கிக் களித்திருக்கும் இன்பமான காலத்தின் அளவு குறைந்து விடுமோ என எண்ணுவதால் ஊடலிலும் ஒருவகைத் துன்பம் காதலர்க்கு உண்டு

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(இதுவும் அது.) புணர்வது நீடுவது (கொல்) அன்று கொல் என்று - இனிய புணர்ச்சி நீட்டிக்குமோ நீட்டியாதோ என்று கருதலான்; ஊடலின் ஓர் துன்பம் உண்டு - இன்பத்திற்கு இன்றியமையாத ஊடலின் கண்ணேயும் ஒரு துன்பம் நிகழும். ('என்று' என்னும் எச்சத்திற்குக் 'கருதலான்' என்பது வருவிக்கப்பட்டது. சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது, 'கொல்' என்பதனை 'நீடுவது' என்பதுடனும் கூட்டுக. 'ஆங்கு' என்பது அசைநிலை. ஊடல் - கூடற்கண் விரைவித்தல் கூறியவாறு.)

TRANSLITERATION:
Ootalin Untaangor Thunpam Punarvadhu Neetuva Thandru Kol Endru

TRANSLATION:
A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'

MEANING IN ENGLISH:
The doubt as to whether intercourse would take place soon or not, creates a sorrow (even) in feigned dislike
புலவி - MORE KURAL..
குறள்:1301 புல்லா திராஅப் புலத்தை அவருறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது

Be still reserved, decline his profferred love; A little while his sore distress we 'll prove
குறள்:1302 உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல்

A cool reserve is like the salt that seasons well the mess, Too long maintained, 'tis like the salt's excess
குறள்:1303 அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

'Tis heaping griefs on those whose hearts are grieved; To leave the grieving one without a fond embrace
குறள்:1304 ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று

To use no kind conciliating art when lover grieves, Is cutting out the root of tender winding plant that droops
குறள்:1305 நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை
பூவன்ன கண்ணார் அகத்து

Even to men of good and worthy mind, the petulance Of wives with flowery eyes lacks not a lovely grace
குறள்:1306 துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature
குறள்:1307 ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்றுகொல் என்று

A lovers' quarrel brings its pain, when mind afraid Asks doubtful, 'Will reunion sweet be long delayed?'
குறள்:1308 நோதல் எவன்மற்று நொந்தாரென் றஃதறியும்
காதலர் இல்லா வழி

What good can grieving do, when none who love Are there to know the grief thy soul endures
குறள்:1309 நீரும் நிழல தினிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது

Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love
குறள்:1310 ஊடல் உணங்க விடுவாரோ டென்னெஞ்சம்
கூடுவேம் என்ப தவா

Of her who leaves me thus in variance languishing, To think within my heart with love is fond desire