அதிகாரம்: நெஞ்சொடுபுலத்தல்
Expostulation with Oneself - Nenjotupulaththal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1299

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.


குறள் விளக்கம்
ஒருவர்க்குத் துன்பம் வந்தபோது, தாம் உரிமையாகப் பெற்றுள்ள நெஞ்சமே துணையாகா விட்டால், வேறு யார் துணையாவார்?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) துன்பத்திற்கு - ஒருவர்க்குத் துன்பம் வந்துழி, அது நீக்குதற்கு; தாம் உடைய நெஞ்சம் துணை அல் வழி - தாம் உரித்தாகப் பெற்ற தம்முடைய நெஞ்சம் துணையாகாவழி; துணையாவார் யாரே - வேறு துணையாவார் ஒருவரும் இல்லை (ஈண்டுத் துன்பமாவது - ஊடலுணர்ப்புவயின் வாராமை. அதற்கு நெஞ்சம் துணையாகாமையாவது, அவளை அன்பிலள் என்றொழியாது கூடற்கண்ணே விதும்பல். 'ஒரு துணையும் இன்மையின், இஃது உற்று விடுதலே உள்ளது', என்பதாம்.)

TRANSLITERATION:
Thunpaththirku Yaare Thunaiyaavaar Thaamutaiya Nenjan Thunaiyal Vazhi

TRANSLATION:
And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief?.

MEANING IN ENGLISH:
Who would help me out of one's distress, when one's own soul refuses help to one? .
நெஞ்சொடுபுலத்தல் - MORE KURAL..
குறள்:1291 அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.

You see his heart is his alone O heart, why not be all my own?.
குறள்:1292 உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy?.
குறள்:1293 கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல்.

'The ruined have no friends, 'they say; and so, my heart, To follow him, at thy desire, from me thou dost depart.
குறள்:1294 இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று.

'See, thou first show offended pride, and then submit,' I bade; Henceforth such council who will share with thee my heart?.
குறள்:1295 பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain.
குறள்:1296 தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு.

My heart consumes me when I ponder lone, And all my lover's cruelty bemoan.
குறள்:1297 நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.

Fall'n 'neath the sway of this ignoble foolish heart, Which will not him forget, I have forgotten shame.
குறள்:1298 எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு.

If I contemn him, then disgrace awaits me evermore; My soul that seeks to live his virtues numbers o'er.
குறள்:1299 துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி.

And who will aid me in my hour of grief, If my own heart comes not to my relief?.
குறள்:1300 தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி.

A trifle is unfriendliness by aliens shown, When our own heart itself is not our own!.