அதிகாரம்: குறிப்பறிவுறுத்தல்
The Reading of the Signs - Kuripparivuruththal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1276

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.


குறள் விளக்கம்
பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)

TRANSLITERATION:
Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri Anpinmai Soozhva Thutaiththu

TRANSLATION:
While lovingly embracing me, his heart is only grieved: It makes me think that I again shall live of love bereaved.

MEANING IN ENGLISH:
The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love.
குறிப்பறிவுறுத்தல் - MORE KURAL..
குறள்:1271 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint, Something, I know not, what, would utter of complaint.
குறள்:1272 கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது.

The simple one whose beauty fills mine eye, whose shoulders curve Like bambu stem, hath all a woman's modest sweet reserve.
குறள்:1273 மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு.

As through the crystal beads is seen the thread on which they 're strung So in her beauty gleams some thought cannot find a tongue.
குறள்:1274 முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.

As fragrance in the opening bud, some secret lies Concealed in budding smile of this dear damsel's eyes.
குறள்:1275 செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

The secret wiles of her with thronging armlets decked, Are medicines by which my raising grief is checked.
குறள்:1276 பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

While lovingly embracing me, his heart is only grieved: It makes me think that I again shall live of love bereaved.
குறள்:1277 தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

My severance from the lord of this cool shore, My very armlets told me long before.
குறள்:1278 நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

My loved one left me, was it yesterday? Days seven my pallid body wastes away!.
குறள்:1279 தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

She viewed her tender arms, she viewed the armlets from them slid; She viewed her feet: all this the lady did.
குறள்:1280 பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

To show by eye the pain of love, and for relief to pray, Is womanhood's most womanly device, men say.