அதிகாரம்: அவர்வயின்விதும்பல்
Mutual Desire - Avarvayinvidhumpal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1267

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.


குறள் விளக்கம்
என்னுடைய கண்போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது அவரைத் தழுவுவேனோ? அவரோடு கூடுவேனோ?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(இதுவும் அது.) கண் அன்ன கேளிர் வரின் - கண்போற்சிறந்த கேளிர் வருவராயின், புலப்பேன் கொல் - அவர் வரவு நீட்டித்தமை நோக்கி யான் புலக்கக்கடவேனோ; புல்லுவேன் கொல் - அன்றி என் ஆற்றாமை நோக்கிப் புல்லக்கடவேனோ; கலப்பேன்கொல் - அவ்விரண்டும் வேண்டுதலான் அவ்விரு செயல்களையும் விரவக்கடவேனோ? யாது செய்யக் கடவேன்? (புலவியும் புல்லலும் ஒரு பொழுதின்கண் விரவாமையின், 'கலப்பேன் கொல்' என்றாள். மூன்றனையுஞ் செய்தல் கருத்தாகலின், விதுப்பாயிற்று. இனிக் 'கலப்பேன்கொல்' என்பதற்கு 'ஒரு புதுமை செய்யாது பிரியாத நாட்போலக் கலந்தொழுகுவேனோ'? என்று உரைப்பாரும் உளர்.)

TRANSLITERATION:
Pulappenkol Pulluven Kollo Kalappenkol Kananna Kelir Viran

TRANSLATION:
On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?.

MEANING IN ENGLISH:
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.
அவர்வயின்விதும்பல் - MORE KURAL..
குறள்:1261 வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல்.

By My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn, With nothing on the wall the days since I was left forlorn.
குறள்:1262 இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து.

O thou with gleaming jewels decked, could I forget for this one day, Henceforth these bracelets from my arms will slip, my beauty worn away.
குறள்:1263 உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன்.

On victory intent, His mind sole company he went; And I yet life sustain! And long to see his face again!.
குறள்:1264 கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு.

'He comes again, who left my side, and I shall taste love's joy,'- My heart with rapture swells, when thoughts like these my mind employ.
குறள்:1265 காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

O let me see my spouse again and sate these longing eyes! That instant from my wasted frame all pallor flies.
குறள்:1266 வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட.

O let my spouse but come again to me one day! I'll drink that nectar: wasting grief shall flee away.
குறள்:1267 புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.

On the return of him who is as dear as my eyes, am I displeased or am I to embrace (him); or am I to do both?.
குறள்:1268 வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து.

O would my king would fight, o'ercome, devide the spoil; At home, to-night, the banquet spread should crown the toil.
குறள்:1269 ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு.

One day will seem like seven to those who watch and yearn For that glad day when wanderers from afar return.
குறள்:1270 பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால்.

What's my return, the meeting hour, the wished-for greeting worth, If she heart-broken lie, with all her life poured forth?.