அதிகாரம்: நெஞ்சொடுகிளத்தல்
Soliloquy - Nenjotukilaththal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1249

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.


குறள் விளக்கம்
என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை உடைத்து, அதனை ஒழி' என்பதாம்.)

TRANSLITERATION:
Ullaththaar Kaadha Lavaraal Ullinee Yaaruzhaich Cheriyen Nenju

TRANSLATION:
My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find?.

MEANING IN ENGLISH:
O my soul! to whom would you repair, while the dear one is within yourself?.
நெஞ்சொடுகிளத்தல் - MORE KURAL..
குறள்:1241 நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து.

My heart, canst thou not thinking of some med'cine tell, Not any one, to drive away this grief incurable?.
குறள்:1242 காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு.

Since he loves not, thy smart Is folly, fare thee well my heart!.
குறள்:1243 இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல்.

What comes of sitting here in pining thought, O heart? He knows No pitying thought, the cause of all these wasting woes.
குறள்:1244 கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

O rid me of these eyes, my heart; for they, Longing to see him, wear my life away.
குறள்:1245 செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர்.

O heart, as a foe, can I abandon utterly Him who, though I long for him, longs not for me?.
குறள்:1246 கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain, If thou thy love behold, embracing, soothing all thy pain.
குறள்:1247 காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு.

Or bid thy love, or bid thy shame depart; For me, I cannot bear them both, my worthy heart!.
குறள்:1248 பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

Thou art befooled, my heart, thou followest him who flees from thee; And still thou yearning criest: 'He will nor pity show nor love to me.'.
குறள்:1249 உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find?.
குறள்:1250 துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.

If I should keep in mind the man who utterly renounces me, My soul must suffer further loss of dignity.