அதிகாரம்: கனவுநிலையுரைத்தல்
The Visions of the Night - Kanavunilaiyuraiththal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1213

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.


குறள் விளக்கம்
நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் கனவில் காண்பதால்தான் என்னுடைய உயிர் இன்னும் நீங்காமல் உள்ளதாகின்றது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(ஆற்றாள் எனக் கவன்றாட்கு ஆற்றுவல் என்பதுபடச் சொல்லியது.) நனவினான் நல்காதவரை - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை; கனவினாற் காண்டலின் என் உயிர் உண்டு - யான் கனவின்கண் கண்ட காட்சியானே என்னுயிர் உண்டாகா நின்றது. (மூன்றனுருபுகள் ஏழன் பொருண்மைக்கண் வந்தன. 'அக்காட்சியானே யான் ஆற்றியுளேன் ஆகின்றேன். நீ கவலல் வேண்டா', என்பதாம்.)

TRANSLITERATION:
Nanavinaal Nalkaa Thavaraik Kanavinaal Kaantalin Unten Uyir

TRANSLATION:
Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes!.

MEANING IN ENGLISH:
My life lasts because in my dream I behold him who does not favour me in my waking hours.
கனவுநிலையுரைத்தல் - MORE KURAL..
குறள்:1211 காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து.

It came and brought to me, that nightly vision rare, A message from my love,- what feast shall I prepare?.
குறள்:1212 கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன்.

If my dark, carp-like eye will close in sleep, as I implore, The tale of my long-suffering life I'll tell my loved one o'er.
குறள்:1213 நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர்.

Him, who in waking hour no kindness shows, In dreams I see; and so my lifetime goes!.
குறள்:1214 கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு.

Some pleasure I enjoy when him who loves not me In waking hours, the vision searches out and makes me see.
குறள்:1215 நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது.

As what I then beheld in waking hour was sweet, So pleasant dreams in hour of sleep my spirit greet.
குறள்:1216 நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.

And if there were no waking hour, my love In dreams would never from my side remove.
குறள்:1217 நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது.

The cruel one, in waking hour, who all ungracious seems, Why should he thus torment my soul in nightly dreams?.
குறள்:1218 துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து.

And when I sleep he holds my form embraced; And when I wake to fill my heart makes haste!.
குறள்:1219 நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்.

In dreams who ne'er their lover's form perceive, For those in waking hours who show no love will grieve.
குறள்:1220 நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர்.

They say, that he in waking hours has left me lone; In dreams they surely see him not,- these people of the town.