அதிகாரம்: நடுவு நிலைமை
Impartiality - Natuvu Nilaimai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:120

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.


குறள் விளக்கம்
பிறர் பொருளையும் தம் பொருள் போல் போற்றிச் செய்தால், அதுவே வாணிகம் செய்வோர்க்கு உரி‌ய நல்ல வாணிக முறையாகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
பிறவும் தமபோல் பேணிச் செயின் -பிறர் பொருளையும் தம்பொருள் போலப் பேணிச் செய்யின்; வாணிகம் செய்வார்க்கு வாணிகம் - வாணிகஞ்செய்வார்க்கு நன்றாய் வாணிகம் ஆம். (பிறவும் தமபோல் செய்தலாவது, கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல். இப்பாட்டு மூன்றனுள், முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின்; எனையது வாணிகரை நோக்கிற்று, அவ்விருதிறத்தார்க்கும் இவ்வறம் வேறாகச் சிறந்தமையின்.)

TRANSLITERATION:
Vaanikam Seyvaarkku Vaanikam Penip Piravum Thamapol Seyin

TRANSLATION:
As thriving trader is the trader known, Who guards another's interests as his own.

MEANING IN ENGLISH:
The true merchandize of merchants is to guard and do by the things of others as they do by their own.
நடுவு நிலைமை - MORE KURAL..
குறள்:111 தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்.

That equity which consists in acting with equal regard to each of (the three) divisions of men [enemies, strangers and friends] is a pre-eminent virtue.
குறள்:112 செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து.

The just man's wealth unwasting shall endure, And to his race a lasting joy ensure.
குறள்:113 நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

Though only good it seem to give, yet gain By wrong acquired, not e'en one day retain! .
குறள்:114 தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.

Who just or unjust lived shall soon appear: By each one's offspring shall the truth be clear.
குறள்:115 கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.

The gain and loss in life are not mere accident; Just mind inflexible is sages' ornament.
குறள்:116 கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின்.

If, right deserting, heart to evil turn, Let man impending ruin's sign discern!.
குறள்:118 சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

To stand, like balance-rod that level hangs and rightly weighs, With calm unbiassed equity of soul, is sages' praise.
குறள்:119 சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.

Inflexibility in word is righteousness, If men inflexibility of soul possess.
குறள்:120 வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.

As thriving trader is the trader known, Who guards another's interests as his own.