அதிகாரம்: தனிப்படர்மிகுதி
The Solitary Anguish - Thanippatarmikudhi
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1194

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.


குறள் விளக்கம்
தாம் விரும்பும் காதலரால் விரும்பப்படாவிட்டால் உலகத்தாரால் விரும்பப்படும் நிலையில் உள்ளவரும் நல்வினை பொருந்தியவர் அல்லர்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
('காதலரை இயற்பழித்தலை அஞ்சி அவரருளின்மை மறைத்த நீ கடவுட் கற்பினையாகலின், கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுதி', என்ற தோழிக்குச் சொல்லியது.) வீழப்படுவார் - கற்புடை மகளிரால் நன்கு மதிக்கப்படுவாரும்; தாம் வீழ்வார் வீழப்படார் எனின் கெழீஇயிலர் - தாம் விரும்பும் கணவரான் விரும்பப் படாராயின் தீவினையாட்டியர்.(சிறப்பு உம்மை, விகாரத்தால் தொக்கது. கெழீஇயின்மை: நல்வினையின்மை; அஃது அருத்தாபத்தியால் தீவினையுடைமையாயிற்று. 'தீவினையுடையோற்கு அந்நன்கு மதிப்பால் பயனில்லை', என்பதாம்.)

TRANSLITERATION:
Veezhap Patuvaar Kezheeiyilar Thaamveezhvaar Veezhap Pataaar Enin

TRANSLATION:
Those well-beloved will luckless prove, Unless beloved by those they love.

MEANING IN ENGLISH:
Even those who are esteemed (by other women) are devoid of excellence, if they are not loved by their beloved.
தனிப்படர்மிகுதி - MORE KURAL..
குறள்:1191 தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி.

The bliss to be beloved by those they love who gains, Of love the stoneless, luscious fruit obtains.
குறள்:1192 வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி.

As heaven on living men showers blessings from above, Is tender grace by lovers shown to those they love.
குறள்:1193 வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு.

Who love and are beloved to them alone Belongs the boast, 'We've made life's very joys our own.'.
குறள்:1194 வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின்.

Those well-beloved will luckless prove, Unless beloved by those they love.
குறள்:1195 நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை.

From him I love to me what gain can be, Unless, as I love him, he loveth me?.
குறள்:1196 ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.

Love on one side is bad; like balanced load By porter borne, love on both sides is good.
குறள்:1197 பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான்.

While Kaman rushes straight at me alone, Is all my pain and wasting grief unknown? .
குறள்:1198 வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்.

Who hear from lover's lips no pleasant word from day to day, Yet in the world live out their life,- no braver souls than they!.
குறள்:1199 நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.

Though he my heart desires no grace accords to me, Yet every accent of his voice is melody.
குறள்:1200 உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு.

Tell him thy pain that loves not thee? Farewell, my soul, fill up the sea!.