அதிகாரம்: பசப்புறுபருவரல்
The Pallid Hue - Pasapparuparuvaral
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1184

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.


குறள் விளக்கம்
யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
('பிரிகின்றவர் தெளிவித்த சொற்களையும் அவர் நல்திறங்களையும் அறிதியாகலின் நீட்டியாது வருவர்', என்ற வழிச் சொல்லியது.) யான் உள்ளுவன் - அவர் சொற்களை யான் மனத்தால் நினையா நிற்பேன்; உரைப்பது அவர் திறம் - வாக்கால் உரைப்பதும் அவர் நல்திறங்களையே; பசப்புக் கள்ளம் - அங்ஙனம் செய்யாநிற்கவும், பசப்பு வந்து நின்றது, இது வஞ்சனையாயிருந்தது. (பிறவும், ஓவும் அசைநிலை. மெய் மற்றை மனவாக்குகளின் வழித்தாகலின், அதன் கண்ணும் வரற்பாற்றன்றாயிருக்க வந்தமையின், இதன் செயல் கள்ளமாயிருந்தது எனத் தான் ஆற்றுகின்றமை கூறியவாறாயிற்று.)

TRANSLITERATION:
Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo Pasappu

TRANSLATION:
I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray.

MEANING IN ENGLISH:
I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.
பசப்புறுபருவரல் - MORE KURAL..
குறள்:1181 நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற.

I willed my lover absent should remain; Of pining's sickly hue to whom shall I complain?.
குறள்:1182 அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு.

'He gave': this sickly hue thus proudly speaks, Then climbs, and all my frame its chariot makes.
குறள்:1183 சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.

Of comeliness and shame he me bereft, While pain and sickly hue, in recompense, he left.
குறள்:1184 உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு.

I meditate his words, his worth is theme of all I say, This sickly hue is false that would my trust betray.
குறள்:1185 உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.

My lover there went forth to roam; This pallor of my frame usurps his place at home.
குறள்:1186 விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

As darkness waits till lamp expires, to fill the place, This pallor waits till I enjoy no more my lord's embrace.
குறள்:1187 புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

I lay in his embrace, I turned unwittingly; Forthwith this hue, as you might grasp it, came on me.
குறள்:1188 பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

On me, because I pine, they cast a slur; But no one says, 'He first deserted her.'.
குறள்:1189 பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

Well! let my frame, as now, be sicklied o'er with pain, If he who won my heart's consent, in good estate remain!.
குறள்:1190 பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain.