அதிகாரம்: பிரிவாற்றாமை
Separation unendurable - Pirivaatraamai
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1157

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.


குறள் விளக்கம்
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்யாயை நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)

TRANSLITERATION:
Thuraivan Thurandhamai Thootraakol Munkai Iraiiravaa Nindra Valai

TRANSLATION:
The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore.

MEANING IN ENGLISH:
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?.
பிரிவாற்றாமை - MORE KURAL..
குறள்:1151 செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை.

If you will say, 'I leave thee not,' then tell me so; Of quick return tell those that can survive this woe.
குறள்:1152 இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு.

It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace.
குறள்:1153 அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான்.

To trust henceforth is hard, if ever he depart, E'en he, who knows his promise and my breaking heart.
குறள்:1154 அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு.

If he depart, who fondly said, 'Fear not,' what blame's incurred By those who trusted to his reassuring word?.
குறள்:1155 ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு.

If you would guard my life, from going him restrain Who fills my life! If he depart, hardly we meet again.
குறள்:1156 பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை.

To cherish longing hope that he should ever gracious be, Is hard, when he could stand, and of departure speak to me.
குறள்:1157 துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.

The bracelet slipping from my wrist announced before Departure of the Prince that rules the ocean shore.
குறள்:1158 இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு.

'Tis sad to sojourn in the town where no kind kinsmen dwell; 'Tis sadder still to bid a friend beloved farewell.
குறள்:1159 தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ.

Fire burns the hands that touch; but smart of love Will burn in hearts that far away remove.
குறள்:1160 அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர்.

Sorrow's sadness meek sustaining, Driving sore distress away, Separation uncomplaining Many bear the livelong day!.