அதிகாரம்: புணர்ச்சிமகிழ்தல்
Rejoicing in the Embrace - Punarchchimakizhdhal
குறள் இயல்: களவியல்
The Pre-marital love - Kalaviyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1109

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.


குறள் விளக்கம்
ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
(கரத்தல் வேண்டாமையின், இடையறிவு இல்லாத கூட்டமே இன்பப் பயனுடைத்து என வரைவு கடாவியாட்குச் சொல்லியது.) ஊடல் உணர்தல் புணர்தல் இவை - புணர்ச்சி இனிதாதற் பொருட்டு வேண்டுவதாய ஊடலும், அதனை அளவறிந்து நீங்குதலும், அதன்பின் நிகழ்வதாய அப்புணர்ச்சிதானும் என இவை அன்றே; காமம் கூடியார் பெற்ற பயன் - வரைந்து கொண்டு காமத்தை இடைவிடாது எய்தியவர் பெற்ற பயன்கள்? ('ஆடவர்க்குப் பிரிவு என்பது ஒன்று உளதாதல் மேலும், அதுதான் பரத்தையர் மாட்டாதலும், அதனையறிந்து மகளிர் ஊடி நிற்றலும், அவவூடலைத் தவறு செய்தவர் தாமே தம் தவறின்மை கூறி நீக்கலும், பின்னும் அவ்விருவரும் ஒத்த அன்பினரய்க் கூடலுமன்றே முன்வரைந்தெய்தினார் பெற்ற பயன். அப்பயன் இருதலைப் புள்ளின் ஓருயிராய் உழுவலன்புடைய எமக்கு வேண்டா', என அவ்வரைந் தெய்தலை இகழ்ந்து கூறியவாறு.)

TRANSLITERATION:
Ootal Unardhal Punardhal Ivaikaamam Kootiyaar Petra Payan

TRANSLATION:
The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtained.

MEANING IN ENGLISH:
Love quarrel, reconciliation and intercourse - these are the advantages reaped by those who marry for lust.
புணர்ச்சிமகிழ்தல் - MORE KURAL..
குறள்:1101 கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

All joys that senses five- sight, hearing, taste, smell, touch- can give, In this resplendent armlets-bearing damsel live! .
குறள்:1102 பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து.

Disease and medicine antagonists we surely see; This maid, to pain she gives, herself is remedy.
குறள்:1103 தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு.

Than rest in her soft arms to whom the soul is giv'n, Is any sweeter joy in his, the Lotus-eyed-one's heaven?.
குறள்:1104 நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்.

Withdraw, it burns; approach, it soothes the pain; Whence did the maid this wondrous fire obtain?.
குறள்:1105 வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட்
டார் கதுப்பினாள் தோள்.

In her embrace, whose locks with flowery wreaths are bound, Each varied form of joy the soul can wish is found.
குறள்:1106 உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்.

Ambrosia are the simple maiden's arms; when I attain Their touch, my withered life puts forth its buds again!.
குறள்:1107 தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

As when one eats from household store, with kindly grace Sharing his meal: such is this golden maid's embrace.
குறள்:1108 வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு.

Sweet is the strict embrace of those whom fond affection binds, Where no dissevering breath of discord entrance finds.
குறள்:1109 ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன்.

The jealous variance, the healing of the strife, reunion gained: These are the fruits from wedded love obtained.
குறள்:1110 அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

The more men learn, the more their lack of learning they detect; 'Tis so when I approach the maid with gleaming jewels decked.