அதிகாரம்: இரவச்சம்
The Dread of Mendicancy - Iravachcham
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:1062

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.


குறள் விளக்கம்
உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
உலகு இயற்றியான் இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் - இவ்வுலகத்தைப் படைத்தவன் இதன்கண் வாழ்வார்க்கு முயன்று உயிர் வாழ்தலையன்றி, இரந்தும் உயிர் வாழ்தலை வேண்டி விதித்தானாயின்; பரந்து கெடுக - அக்கொடியோன் தானும் அவரைப் போன்று எங்கும் அலமந்து கெடுவானாக. (மக்களுயிர்க்கெல்லாம் வாழ்நாளும், அதற்கு வேண்டுவதாய உண்டியும், அதற்கு ஏதுவாய செய்தொழிலும், பழவினை வயத்தால் கருவொடுங் கலந்தவன்றே அவன் கற்பிக்கும் அன்றே? அவற்றுள் சில உயிர்க்கு இரத்தலையும் ஒரு செய் தொழிலாகக் கற்பித்தானாயின், அத்தீவினையால் தானும் அத்துன்பமுறல் வேண்டும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் அவ்விரவின் கொடுமை கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu Ketuka Ulakiyatri Yaan

TRANSLATION:
If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so.

MEANING IN ENGLISH:
If the Creator of the world has decreed even begging as a means of livelihood, may he too go abegging and perish.
இரவச்சம் - MORE KURAL..
குறள்:1061 கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும்.

Ten million-fold 'tis greater gain, asking no alms to live, Even from those, like eyes in worth, who nought concealing gladly give.
குறள்:1062 இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான்.

If he that shaped the world desires that men should begging go, Through life's long course, let him a wanderer be and perish so.
குறள்:1063 இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில்.

Nothing is harder than the hardness that will say, 'The plague of penury by asking alms we'll drive away'
குறள்:1064 இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு.

Who ne'er consent to beg in utmost need, their worth Has excellence of greatness that transcends the earth.
குறள்:1065 தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில்.

Nothing is sweeter than to taste the toil-won cheer, Though mess of pottage as tasteless as the water clear.
குறள்:1066 ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில்.

E'en if a draught of water for a cow you ask, Nought's so distasteful to the tongue as beggar's task.
குறள்:1067 இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று.

One thing I beg of beggars all, 'If beg ye may, Of those who hide their wealth, beg not, I pray'.
குறள்:1068 இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும்.

The fragile bark of beggary Wrecked on denial's rock will lie.
குறள்:1069 இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

The heart will melt away at thought of beggary, With thought of stern repulse 'twill perish utterly.
குறள்:1070 கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்.

E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help denies? .