அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
Gratitude - Seynnandri Aridhal
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:106

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.


குறள் விளக்கம்
குற்றமற்றவரின் உறவை எப்போதும் மறக்கலாகாது: துன்பம் வந்த காலத்தில் உறுதுணையாய் உதவியவர்களின் நட்பை எப்போதும் விடாலாகாது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு துறவற்க - துன்பக் காலத்துத் தனக்குப் பற்றுக்கோடாயினாரது நட்பை விடாதொழிக; மாசு அற்றார் கேண்மை மறவற்க - அறிவொழுக்கங்களில் குற்றமற்றாரது கேண்மையை மறவா தொழிக. (கேண்மை: கேள் ஆம் தன்மை. இம்மைக்கு உறுதி கூறுவார், மறுமைக்கு உறுதியும் உடன் கூறினார்.)

TRANSLITERATION:
Maravarka Maasatraar Kenmai Thuravarka Thunpaththul Thuppaayaar Natpu

TRANSLATION:
Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!.

MEANING IN ENGLISH:
Forsake not the friendship of those who have been your staff in adversity. Forget not be benevolence of the blameless.
செய்ந்நன்றி அறிதல் - MORE KURAL..
குறள்:101 செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.

Assistance given by those who ne'er received our aid, Is debt by gift of heaven and earth but poorly paid.
குறள்:102 காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

A timely benefit, -though thing of little worth, The gift itself, -in excellence transcends the earth.
குறள்:104 தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

Each benefit to those of actions' fruit who rightly deem, Though small as millet-seed, as palm-tree vast will seem.
குறள்:105 உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து.

The kindly aid's extent is of its worth no measure true; Its worth is as the worth of him to whom the act you do.
குறள்:106 மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு.

Kindness of men of stainless soul remember evermore! Forsake thou never friends who were thy stay in sorrow sore!.
குறள்:107 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.

Through all seven worlds, in seven-fold birth, Remains in mem'ry of the wise. Friendship of those who wiped on earth, The tears of sorrow from their eyes.
குறள்:108 நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று.

'Tis never good to let the thought of good things done thee pass away; Of things not good, 'tis good to rid thy memory that very day.
குறள்:109 கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும்.

Effaced straightway is deadliest injury, By thought of one kind act in days gone by.
குறள்:110 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.

Who every good have killed, may yet destruction flee; Who 'benefit' has killed, that man shall ne'er 'scape free!.