அதிகாரம்: இரவு
Mendicancy - Iravu
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:1056

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.


குறள் விளக்கம்
உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் - உள்ளது கரத்தலாகிய நோயில்லாரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும் - மானம்விடாது இரப்பார்க்கு நிரப்பான் வரும் துன்பங்களெல்லாம் சேரக் கெடும். ('கரத்தல்', ஒருவற்கு வேண்டுவதொன்றன்மையின், அதனை 'நோய்' என்றும், அஃது இல்லாத இரக்கத்தக்காரைக் கண்டபொழுதே அவர் கழியுவகையராவர் ஆகலின், 'எல்லாம் ஒருங்கு கெடும்' என்றும் கூறினார். இடும்பை - ஆகுபெயர். 'முழுதும் கெடும்' என்று பாடம் ஓதி 'எஞ்சாமற் கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

TRANSLITERATION:
Karappitumpai Yillaaraik Kaanin Nirappitumpai Ellaam Orungu Ketum

TRANSLATION:
It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee.

MEANING IN ENGLISH:
All the evil of begging will be removed at the sight of those who are far from the evil of refusing.
இரவு - MORE KURAL..
குறள்:1052 இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்.

Even to ask an alms may pleasure give, If what you ask without annoyance you receive.
குறள்:1053 கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து.

The men who nought deny, but know what's due, before their face To stand as suppliants affords especial grace.
குறள்:1054 இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு.

Like giving alms, may even asking pleasant seem, From men who of denial never even dream.
குறள்:1055 கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது.

Because on earth the men exist, who never say them nay, Men bear to stand before their eyes for help to pray.
குறள்:1056 கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்.

It those you find from evil of 'denial' free, At once all plague of poverty will flee.
குறள்:1057 இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து.

If men are found who give and no harsh words of scorn employ, The minds of askers, through and through, will thrill with joy.
குறள்:1058 இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று.

If askers cease, the mighty earth, where cooling fountains flow, Will be a stage where wooden puppets come and go.
குறள்:1059 ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை.

What glory will there be to men of generous soul, When none are found to love the askers' role?.
குறள்:1060 இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி.

Askers refused from wrath must stand aloof; The plague of poverty itself is ample proof.