அதிகாரம்: நல்குரவு
Poverty - Nalkuravu
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:1049

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.


குறள் விளக்கம்
ஒருவன் நெருப்பினுள் இருந்து தூங்குதலும் முடியும், ஆனால் வறுமை நிலையில் எவ்வகையாலும் கண்மூடித் தூங்குதல் அரிது.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் - மந்திரம் மருந்துகளான் ஒருவனுக்கு நெருப்பிடையே கிடந்து உறங்கலும் ஆம்; நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது - நிரப்பு வந்துழி யாதொன்றானும் உறக்கம் இல்லை. ('நெருப்பினும் நிரப்புக் கொடிது', என்றவாறாயிற்று. இதுவும் அவன் கூற்று. இவை நான்கு பாட்டானும் நல்கூர்ந்தார்க்கு உளதாம் குற்றம் கூறப்பட்டது.)

TRANSLITERATION:
Neruppinul Thunjalum Aakum Nirappinul Yaadhondrum Kanpaatu Aridhu

TRANSLATION:
Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose.

MEANING IN ENGLISH:
One may sleep in the midst of fire; but by no means in the midst of poverty.
நல்குரவு - MORE KURAL..
குறள்:1041 இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது.

You ask what sharper pain than poverty is known; Nothing pains more than poverty, save poverty alone.
குறள்:1042 இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.

Malefactor matchless! poverty destroys This world's and the next world's joys.
குறள்:1043 தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை.

Importunate desire, which poverty men name, Destroys both old descent and goodly fame.
குறள்:1045 நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும்.

From poverty, that grievous woe, Attendant sorrows plenteous grow.
குறள்:1046 நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும்.

Though deepest sense, well understood, the poor man's words convey, Their sense from memory of mankind will fade away.
குறள்:1047 அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.

From indigence devoid of virtue's grace, The mother e'en that bare, estranged, will turn her face.
குறள்:1048 இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.

And will it come today as yesterday, The grief of want that eats my soul away?.
குறள்:1049 நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.

Amid the flames sleep may men's eyelids close, In poverty the eye knows no repose.
குறள்:1050 துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று.

Unless the destitute will utterly themselves deny, They cause their neighbour's salt and vinegar to die.