அதிகாரம்: உழவு
Farming - Uzhavu
குறள் இயல்: குடியியல்
Miscellaneous - Kudiyiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:1040

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.


குறள் விளக்கம்
எம்மிடம் ஒரு பொருளும் இல்லை என்று எண்ணி வறுமையால் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் தன்னுள் சிரிப்பாள்.

திரு மு.வரதராசனார் உரை (Mu.Varadharasanar Definition)
இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின் - யாம் வறியேம் என்று சொல்லி மடிந்திருப்பாரைக் கண்டால்; நிலம் என்னும் நல்லாள் நகும் - நிலமகள் என்று உயர்த்துச் சொல்லப்படுகின்ற நல்லாள் தன்னுள்ளே நகா நிற்கும்.(உழுதல் முதலிய செய்வார் யாவர்க்கும் செல்வங் கொடுத்து வருகின்றவாறு பற்றி 'நல்லாள்' என்றும், அது கண்டுவைத்தும் அதுசெய்யாது வறுமையுறுகின்ற பேதைமை பற்றி, 'நகும்' என்றும் கூறினார். 'இரப்பாரை' என்று பாடம் ஓதுவாரும் உளர். இதனான் அது செய்யாத வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது. வருகின்ற அதிகாரமுறைமைக்குக் காரணமும் இது.)

TRANSLITERATION:
Ilamendru Asaii Iruppaaraik Kaanin Nilamennum Nallaal Nakum

TRANSLATION:
The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty.

MEANING IN ENGLISH:
The maiden, Earth, will laugh at the sight of those who plead poverty and lead an idle life.
உழவு - MORE KURAL..
குறள்:1031 சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.

Howe'er they roam, the world must follow still the plougher's team; Though toilsome, culture of the ground as noblest toil esteem.
குறள்:1032 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து.

The ploughers are the linch-pin of the world; they bear Them up who other works perform, too weak its toils to share.
குறள்:1033 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.

Who ploughing eat their food, they truly live: The rest to others bend subservient, eating what they give.
குறள்:1034 பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர்.

O'er many a land they 'll see their monarch reign, Whose fields are shaded by the waving grain.
குறள்:1036 உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை.

For those who 've left what all men love no place is found, When they with folded hands remain who till the ground.
குறள்:1037 தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும்.

Reduce your soil to that dry state, When ounce is quarter-ounce's weight; Without one handful of manure, Abundant crops you thus secure.
குறள்:1038 ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு.

To cast manure is better than to plough; Weed well; to guard is more than watering now.
குறள்:1039 செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும்.

When master from the field aloof hath stood; Then land will sulk, like wife in angry mood.
குறள்:1040 இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும்.

The earth, that kindly dame, will laugh to see, Men seated idle pleading poverty.