அதிகாரம்: புதல்வரைப் பெறுதல்
The Wealth of Children - Pudhalvaraip Perudhal
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:61 பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.

As doth the house beseem, she shows her wifely dignity; As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
குறள்:62 எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.

Who children gain, that none reproach, of virtuous worth, No evils touch them, through the sev'n-fold maze of birth.
குறள்:63 தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.

'Man's children are his fortune,' say the wise; From each one's deeds his varied fortunes rise.
குறள்:64 அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.

Than God's ambrosia sweeter far the food before men laid, In which the little hands of children of their own have play'd.
குறள்:65 மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.

To patent sweet the touch of children dear; Their voice is sweetest music to his ear.
குறள்:66 குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.

'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred, Who music of their infants' lisping lips have never heard.
குறள்:67 தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.

Sire greatest boon on son confers, who makes him meet, In councils of the wise to fill the highest seat.
குறள்:68 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.

Their children's wisdom greater than their own confessed, Through the wide world is sweet to every human breast.
குறள்:69 ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

When mother hears him named 'fulfill'd of wisdom's lore,' Far greater joy she feels, than when her son she bore.
குறள்:70 மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்

To sire, what best requital can by grateful child be done? To make men say, 'What merit gained the father such a son?'.