அதிகாரம்: அடக்கமுடைமை
The Possession of Self-restraint - Atakkamutaimai
குறள் இயல்: இல்லறவியல்
Domestic Virtue - Illaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:121 அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.

Control of self does man conduct to bliss th' immortals share; Indulgence leads to deepest night, and leaves him there.
குறள்:122 காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

Guard thou as wealth the power of self-control; Than this no greater gain to living soul!.
குறள்:123 செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.

If versed in wisdom's lore by virtue's law you self restrain. Your self-repression known will yield you glory's gain.
குறள்:124 நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.

In his station, all unswerving, if man self subdue, Greater he than mountain proudly rising to the view.
குறள்:125 எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து.

To all humility is goodly grace; but chief to them With fortune blessed, -'tis fortune's diadem.
குறள்:126 ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுநம்யும் ஏமாப் புடைத்து.

Like tortoise, who the five restrains In one, through seven world bliss obtains.
குறள்:127 யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep.
குறள்:128 ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்.

Though some small gain of good it seem to bring, The evil word is parent still of evil thing.
குறள்:129 தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore; In soul by tongue inflamed, the ulcer healeth never more.
குறள்:130 கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

Who learns restraint, and guards his soul from wrath, Virtue, a timely aid, attends his path.