அதிகாரம்: வலியறிதல்
The Knowledge of Power - Valiyaridhal
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:471 வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.

The force the strife demands, the force he owns, the force of foes, The force of friends; these should he weigh ere to the war he goes.
குறள்:472 ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

Who know what can be wrought, with knowledge of the means, on this, Their mind firm set, go forth, nought goes with them amiss.
குறள்:473 உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

Ill-deeming of their proper powers, have many monarchs striven, And midmost of unequal conflict fallen asunder riven.
குறள்:474 அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.

Who not agrees with those around, no moderation knows, In self-applause indulging, swift to ruin goes.
குறள்:475 பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின்.

With peacock feathers light, you load the wain; Yet, heaped too high, the axle snaps in twain.
குறள்:476 நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும்.

Who daring climbs, and would himself upraise Beyond the branch's tip, with life the forfeit pays.
குறள்:477 ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

With knowledge of the measure due, as virtue bids you give! That is the way to guard your wealth, and seemly live.
குறள்:478 ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை.

Incomings may be scant; but yet, no failure there, If in expenditure you rightly learn to spare.
குறள்:479 அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.

Who prosperous lives and of enjoyment knows no bound, His seeming wealth, departing, nowhere shall be found.
குறள்:480 உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

Beneficence that measures not its bound of means, Will swiftly bring to nought the wealth on which it leans.