அதிகாரம்: குற்றங்கடிதல்
The Correction of Faults - Kutrangatidhal
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:431 செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து.

Who arrogance, and wrath, and littleness of low desire restrain, To sure increase of lofty dignity attain.
குறள்:432 இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு.

A niggard hand, o'erweening self-regard, and mirth Unseemly, bring disgrace to men of kingly brith.
குறள்:433 தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்.

Though small as millet-seed the fault men deem; As palm tree vast to those who fear disgrace 'twill seem.
குறள்:434 குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை.

Freedom from faults is wealth; watch heedfully 'Gainst these, for fault is fatal enmity.
குறள்:435 வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.

His joy who guards not 'gainst the coming evil day, Like straw before the fire shall swift consume away.
குறள்:436 தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

Faultless the king who first his own faults cures, and then Permits himself to scan faults of other men.
குறள்:437 செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்.

Who leaves undone what should be done, with niggard mind, His wealth shall perish, leaving not a wrack behind.
குறள்:438 பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.

The greed of soul that avarice men call, When faults are summed, is worst of all.
குறள்:439 வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

Never indulge in self-complaisant mood, Nor deed desire that yields no gain of good.
குறள்:440 காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்.

If, to your foes unknown, you cherish what you love, Counsels of men who wish you harm will harmless prove.