அதிகாரம்: தெரிந்துதெளிதல்
Selection and Confidence - Therindhudhelidhal
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:501 அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும்.

How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake, Comports himself? This four-fold test of man will full assurance make.
குறள்:502 குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு.

Of noble race, of faultless worth, of generous pride That shrinks from shame or stain; in him may king confide.
குறள்:503 அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

Though deeply learned, unflecked by fault, 'tis rare to see, When closely scanned, a man from all unwisdom free.
குறள்:504 குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.

Weigh well the good of each, his failings closely scan, As these or those prevail, so estimate the man.
குறள்:505 பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

Of greatness and of meanness too, The deeds of each are touchstone true.
குறள்:506 அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி.

Beware of trusting men who have no kith of kin; No bonds restrain such men, no shame deters from sin.
குறள்:507 காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும்.

By fond affection led who trusts in men of unwise soul, Yields all his being up to folly's blind control.
குறள்:508 தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.

Who trusts an untried stranger, brings disgrace, Remediless, on all his race.
குறள்:509 தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.

Trust no man whom you have not fully tried, When tested, in his prudence proved confide.
குறள்:510 தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.

Trust where you have not tried, doubt of a friend to feel, Once trusted, wounds inflict that nought can heal.