அதிகாரம்: குறிப்பறிதல்
Recognition of the Signs - Kuripparidhal
குறள் இயல்: களவியல்
The Pre-marital love - Kalaviyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1091 இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து.

A double witchery have glances of her liquid eye; One glance is glance that brings me pain; the other heals again.
குறள்:1092 கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

The furtive glance, that gleams one instant bright, Is more than half of love's supreme delight.
குறள்:1093 நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃதவள்
யாப்பினுள் அட்டிய நீர்.

She looked, and looking drooped her head: On springing shoot of love 'its water shed! .
குறள்:1094 யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்.

I look on her: her eyes are on the ground the while: I look away: she looks on me with timid smile.
குறள்:1095 குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும்.

She seemed to see me not; but yet the maid Her love, by smiling side-long glance, betrayed.
குறள்:1096 உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும்.

Though with their lips affection they disown, Yet, when they hate us not, 'tis quickly known.
குறள்:1097 செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு.

The slighting words that anger feign, while eyes their love reveal. Are signs of those that love, but would their love conceal.
குறள்:1098 அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும்.

I gaze, the tender maid relents the while; And, oh the matchless grace of that soft smile!.
குறள்:1099 ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள.

The look indifferent, that would its love disguise, Is only read aright by lovers' eyes.
குறள்:1100 கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.

When eye to answering eye reveals the tale of love, All words that lips can say must useless prove.