அதிகாரம்: சொல்வன்மை
Power of Speech - Solvanmai
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:641 நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.

A tongue that rightly speaks the right is greatest gain, It stands alone midst goodly things that men obtain.
குறள்:642 ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

Since gain and loss in life on speech depend, From careless slip in speech thyself defend.
குறள்:643 கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்.

'Tis speech that spell-bound holds the listening ear, While those who have not heard desire to hear.
குறள்:644 திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல்.

Speak words adapted well to various hearers' state; No higher virtue lives, no gain more surely great.
குறள்:645 சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

Speak out your speech, when once 'tis past dispute That none can utter speech that shall your speech refute.
குறள்:646 வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்.

Charming each hearer's ear, of others' words to seize the sense, Is method wise of men of spotless excellence
குறள்:647 சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.

Mighty in word, of unforgetful mind, of fearless speech, 'Tis hard for hostile power such man to overreach.
குறள்:648 விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.

Swiftly the listening world will gather round, When men of mighty speech the weighty theme propound.
குறள்:649 பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.

Who have not skill ten faultless words to utter plain, Their tongues will itch with thousand words man's ears to pain.
குறள்:650 இண்ருழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார்.

Like scentless flower in blooming garland bound Are men who can't their lore acquired to other's ears expound.