அதிகாரம்: தவம்
Penance - Thavam
குறள் இயல்: துறவறவியல்
Ascetic Virtue - Thuravaraviyal
குறள் பால்: அறத்துப்பால்
குறள்:261 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு.

To bear due penitential pains, while no offence He causes others, is the type of 'penitence
குறள்:262 தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அஃதிலார் மேற்கொள் வது.

To 'penitents' sincere avails their 'penitence'; Where that is not, 'tis but a vain pretence.
குறள்:263 துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்.

Have other men forgotten 'penitence' who strive To earn for penitents the things by which they live?.
குறள்:264 ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.

Destruction to his foes, to friends increase of joy. The 'penitent' can cause, if this his thoughts employ.
குறள்:265 வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.

That what they wish may, as they wish, be won, By men on earth are works of painful 'penance' done.
குறள்:266 தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு.

Who works of 'penance' do, their end attain, Others in passion's net enshared, toil but in vain.
குறள்:267 சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு.

The hotter glows the fining fire, the gold the brighter shines; The pain of penitence, like fire, the soul of man refines.
குறள்:268 தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்.

Who gains himself in utter self-control, Him worships every other living soul.
குறள்:269 கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குல்.

The E'en over death the victory he may gain, If power by penance won his soul obtain.
குறள்:270 இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.

The many all things lack! The cause is plain, The 'penitents' are few. The many shun such pain.