அதிகாரம்: வினைசெயல்வகை
Modes of Action - Vinaiseyalvakai
குறள் இயல்: அமைச்சியல்
Ministers of State - Amaichiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:671 சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது.

The Resolve is counsel's end, If resolutions halt In weak delays, still unfulfilled, 'tis grievous fault.
குறள்:672 தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

Slumber when sleepy work's in hand: beware Thou slumber not when action calls for sleepless care!.
குறள்:673 ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்.

When way is clear, prompt let your action be; When not, watch till some open path you see.
குறள்:674 வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

With work or foe, when you neglect some little thing, If you reflect, like smouldering fire, 'twill ruin bring.
குறள்:675 பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல்.

Treasure and instrument and time and deed and place of act: These five, till every doubt remove, think o'er with care exact.
குறள்:676 முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்.

Accomplishment, the hindrances, large profits won By effort: these compare,- then let the work be done.
குறள்:677 செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல்.

Who would succeed must thus begin: first let him ask The thoughts of them who thoroughly know the task.
குறள்:678 வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று.

By one thing done you reach a second work's accomplishment; So furious elephant to snare its fellow brute is sent.
குறள்:679 நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்.

Than kindly acts to friends more urgent thing to do, Is making foes to cling as friends attached to you.
குறள்:680 உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து.

The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head.