அதிகாரம்: கல்வி
Learning -
குறள் இயல்: அரசியல்
Royalty - Arasiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:391 கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

So learn that you may full and faultless learning gain, Then in obedience meet to lessons learnt remain.
குறள்:392 எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..

The twain that lore of numbers and of letters give Are eyes, the wise declare, to all on earth that live.
குறள்:393 கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.

Men who learning gain have eyes, men say; Blockheads' faces pairs of sores display.
குறள்:394 உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.

You meet with joy, with pleasant thought you part; Such is the learned scholar's wonderous art!.
குறள்:395 உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.

With soul submiss they stand, as paupers front a rich man's face; Yet learned men are first; th'unlearned stand in lowest place.
குறள்:396 தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு.

In sandy soil, when deep you delve, you reach the springs below; The more you learn, the freer streams of wisdom flow.
குறள்:397 யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.

The learned make each land their own, in every city find a home; Who, till they die; learn nought, along what weary ways they roam!.
குறள்:398 ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.

The man who store of learning gains, In one, through seven worlds, bliss attains.
குறள்:399 தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.

Their joy is joy of all the world, they see; thus more The learners learn to love their cherished lore.
குறள்:400 கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.

Learning is excellence of wealth that none destroy; To man nought else affords reality of joy.