அதிகாரம்: பகைத்திறந்தெரிதல்
Knowing the Quality of Hate - Pakaiththirandheridhal
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:871 பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.

For Hate, that ill-conditioned thing not e'en in jest. Let any evil longing rule your breast.
குறள்:872 வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை.

Although you hate incur of those whose ploughs are bows, Make not the men whose ploughs are words your foes!.
குறள்:873 ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.

Than men of mind diseased, a wretch more utterly forlorn, Is he who stands alone, object of many foeman's scorn.
குறள்:874 பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.

The world secure on his dexterity depends, Whose worthy rule can change his foes to friends.
குறள்:875 தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.

Without ally, who fights with twofold enemy o'ermatched, Must render one of these a friend attached.
குறள்:876 தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.

Whether you trust or not, in time of sore distress, Questions of diff'rence or agreement cease to press.
குறள்:877 நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து.

To those who know them not, complain not of your woes; Nor to your foeman's eyes infirmities disclose.
குறள்:878 வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.

Know thou the way, then do thy part, thyself defend; Thus shall the pride of those that hate thee have an end.
குறள்:879 இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.

Destroy the thorn, while tender point can work thee no offence; Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
குறள்:880 உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.

But breathe upon them, and they surely die, Who fail to tame the pride of angry enemy.