அதிகாரம்: இகல்
Hostility - Ikal
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:851 இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்.

Hostility disunion's plague will bring, That evil quality, to every living thing.
குறள்:852 பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை.

Though men disunion plan, and do thee much despite 'Tis best no enmity to plan, nor evil deeds requite.
குறள்:853 இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்.

If enmity, that grievous plague, you shun, Endless undying praises shall be won.
குறள்:854 இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின்.

Joy of joys abundant grows, When malice dies that woe of woes.
குறள்:855 இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர்.

If men from enmity can keep their spirits free, Who over them shall gain the victory?.
குறள்:856 இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து.

The life of those who cherished enmity hold dear, To grievous fault and utter death is near.
குறள்:857 மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர்.

The very truth that greatness gives their eyes can never see, Who only know to work men woe, fulfilled of enmity.
குறள்:858 இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு.

'Tis gain to turn the soul from enmity; Ruin reigns where this hath mastery.
குறள்:859 இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு.

Men think not hostile thought in fortune's favouring hour, They cherish enmity when in misfortune's power.
குறள்:860 இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.

From enmity do all afflictive evils flow; But friendliness doth wealth of kindly good bestow.