அதிகாரம்: புலவி நுணுக்கம்
Feigned Anger - Pulavi Nunukkam
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1311 பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.

From thy regard all womankind Enjoys an equal grace; O thou of wandering fickle mind, I shrink from thine embrace.
குறள்:1312 ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து.

One day we silent sulked; he sneezed: The reason well I knew; He thought that I, to speak well pleased, Would say, 'Long life to you!'.
குறள்:1313 கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று.

I wreathed with flowers one day my brow, The angry tempest lowers; She cries, 'Pray, for what woman now Do you put on your flowers?'.
குறள்:1314 யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.

'I love you more than all beside,' 'T was thus I gently spoke; 'What all, what all?' she instant cried; And all her anger woke.
குறள்:1315 இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.

'While here I live, I leave you not,' I said to calm her fears. She cried, 'There, then, I read your thought'; And straight dissolved in tears.
குறள்:1316 உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.

'Each day I called to mind your charms,' 'O, then, you had forgot,' She cried, and then her opened arms, Forthwith embraced me not.
குறள்:1317 வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று.

She hailed me when I sneezed one day; But straight with anger seized, She cried; 'Who was the woman, pray, Thinking of whom you sneezed?'.
குறள்:1318 தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.

And so next time I checked my sneeze; She forthwith wept and cried, (That woman difficult to please), 'Your thoughts from me you hide'.
குறள்:1319 தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று.

I then began to soothe and coax, To calm her jealous mind; 'I see', quoth she, 'to other folks How you are wondrous kind' .
குறள்:1320 நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.

I silent sat, but thought the more, And gazed on her. Then she Cried out, 'While thus you eye me o'er, Tell me whose form you see'.