அதிகாரம்: பழைமை
Familiarity - Pazhaimai
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:801 பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.

Familiarity is friendship's silent pact, That puts restraint on no familiar act.
குறள்:802 நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன்.

Familiar freedom friendship's very frame supplies; To be its savour sweet is duty of the wise.
குறள்:803 பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை.

When to familiar acts men kind response refuse, What fruit from ancient friendship's use?.
குறள்:804 விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.

When friends unbidden do familiar acts with loving heart, Friends take the kindly deed in friendly part.
குறள்:805 பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.

Not folly merely, but familiar carelessness, Esteem it, when your friends cause you distress.
குறள்:806 எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.

Who stand within the bounds quit not, though loss impends, Association with the old familiar friends.
குறள்:807 அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.

Waters True friends, well versed in loving ways, Cease not to love, when friend their love betrays.
குறள்:808 கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின்.

In strength of friendship rare of friend's disgrace who will not hear, The day his friend offends will day of grace to him appear.
குறள்:809 கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.

Friendship of old and faithful friends, Who ne'er forsake, the world commends.
குறள்:810 விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.

Ill-wishers even wish them well, who guard. For ancient friends, their wonted kind regard.