அதிகாரம்: கண்விதுப்பழிதல்
Eyes consumed with Grief - Kanvidhuppazhidhal
குறள் இயல்: கற்பியல்
The Post marital love - Karpiyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1171 கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.

They showed me him, and then my endless pain I saw: why then should weeping eyes complain?.
குறள்:1172 தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்.

How glancing eyes, that rash unweeting looked that day, With sorrow measureless are wasting now away!.
குறள்:1173 கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து.

The eyes that threw such eager glances round erewhile Are weeping now. Such folly surely claims a smile!.
குறள்:1174 பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து.

Those eyes have wept till all the fount of tears is dry, That brought upon me pain that knows no remedy.
குறள்:1175 படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண்.

The eye that wrought me more than sea could hold of woes, Is suffering pangs that banish all repose.
குறள்:1176 ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது.

Oho! how sweet a thing to see! the eye That wrought this pain, in the same gulf doth lie.
குறள்:1177 உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்.

Aching, aching, let those exhaust their stream, That melting, melting, that day gazed on him.
குறள்:1178 பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண்.

Who loved me once, onloving now doth here remain; Not seeing him, my eye no rest can gain.
குறள்:1179 வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்.

When he comes not, all slumber flies; no sleep when he is there; Thus every way my eyes have troubles hard to bear.
குறள்:1180 மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து.

It is not hard for all the town the knowledge to obtain, When eyes, as mine, like beaten tambours, make the mystery plain.