அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல்
Declaration of Love's special Excellence - Kaadharsirappuraiththal
குறள் இயல்: களவியல்
The Pre-marital love - Kalaviyal
குறள் பால்: காமத்துப்பால்
குறள்:1121 பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

The dew on her white teeth, whose voice is soft and low, Is as when milk and honey mingled flow.
குறள்:1122 உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு.

Between this maid and me the friendship kind Is as the bonds that soul and body bind.
குறள்:1123 கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்.

For her with beauteous brow, the maid I love, there place is none; To give her image room, O pupil of mine eye, begone!
குறள்:1124 வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து.

Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die!.
குறள்:1125 உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம்.

I might recall, if I could once forget; but from my heart Her charms fade not, whose eyes gleam like the warrior's dart.
குறள்:1126 கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

My loved one's subtle form departs not from my eyes; I wink them not, lest I should pain him where he lies.
குறள்:1127 கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து.

My love doth ever in my eyes reside; I stain them not, fearing his form to hide.
குறள்:1128 நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து.

Within my heart my lover dwells; from food I turn That smacks of heat, lest he should feel it burn.
குறள்:1129 இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும்இவ் வூர்.

I fear his form to hide, nor close my eyes: 'Her love estranged is gone!' the village cries.
குறள்:1130 உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னும்இவ் வூர்.

Rejoicing in my very soul he ever lies; 'Her love estranged is gone far off!' the village cries