அதிகாரம்: பெண்வழிச்சேறல்
Being led by Women - Penvazhichcheral
குறள் இயல்: நட்பியல்
Friendship - Natpiyal
குறள் பால்: பொருட்பால்
குறள்:901 மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது.

Who give their soul to love of wife acquire not nobler gain; Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
குறள்:902 பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.

Who gives himself to love of wife, careless of noble name His wealth will clothe him with o'erwhelming shame.
குறள்:903 இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.

Who to his wife submits, his strange, unmanly mood Will daily bring him shame among the good.
குறள்:904 மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று.

No glory crowns e'en manly actions wrought By him who dreads his wife, nor gives the other world a thought.
குறள்:905 இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.

Who quakes before his wife will ever tremble too, Good deeds to men of good deserts to do.
குறள்:906 இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.

Though, like the demi-gods, in bliss they dwell secure from harm, Those have no dignity who fear the housewife's slender arm.
குறள்:907 பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

The dignity of modest womanhood excels His manliness, obedient to a woman's law who dwells.
குறள்:908 நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.

In Who to the will of her with beauteous brow their lives conform, Aid not their friends in need, nor acts of charity perform.
குறள்:909 அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.

No virtuous deed, no seemly wealth, no pleasure, rests With them who live obedient to their wives' behests.
குறள்:910 எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல்.

Where pleasures of the mind, that dwell in realms of thought, abound, Folly, that springs from overweening woman's love, is never found.