Home  |  திரை உலகம்

திருடு போகாத மனசு ( Thirudu Pogatha Manasu ) )

திருடு போகாத மனசு ( Thirudu Pogatha Manasu	)  )

Movie Name: Thirudu Pogatha Manasu திருடு போகாத மனசு
Hero: Senthil Ganesh
Heroine: Sai Aishwarya
Year: 2014
Movie Director: Chella Thangiah
Movie Producer: Ajantha Kalaikoodam



செந்தில் கணேஷ் கிராமிய பாடல்கள் பாடும் மேடை கலைஞன். இவர் சினிமாவில் பெரிய பாடகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில், இவரோடு மேடையில் ஆடி, பாடும் விமலா என்ற பெண் இவரை ஒருதலையாக காதலிக்கிறார். ஆனால், தனது லட்சியத்துக்காக அவளுடைய காதலை இவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். இயக்குனர் செல்ல தங்கையாவின் படத்தில் பாடக்கூடிய வாய்ப்பு வருகிறது. அதற்காக சென்னைக்கு சென்று இயக்குனர் செல்ல தங்கையாவை சந்திக்கிறார். அங்கு இயக்குனரிடம் தனது நடிப்பு ஆசையையும் கூறும் நாயகனிடம், இயக்குனர் வெளிஉலகத்தில் 3 மாத காலம் பைத்தியமாக நடித்தால் உனக்கு நடிக்க வாய்ப்பு தருகிறேன் என்று கூறுகிறார்.
தாய், தந்தை இழந்து, ஹாஸ்டலில் தங்கி மருத்துவப்படிப்பு படித்து வரும் நாயகி சாய் ஐஸ்வர்யா, பைத்தியமான ஒருவரை குணமாக்கி, அவரையே திருமணம் செய்துகொள்வேன் என்ற லட்சியத்துடன் இருந்து வருகிறாள். ஒருநாள் தொலைக்காட்சியில் நாயகனின் பாடலை கேட்கிறாள். அதைப்பார்த்ததும் நாயகன் மீது இவளுக்கு ஒரு ஈர்ப்பு வருகிறது. இதற்கிடையில் நாயகனுக்கும் அவள் மீது காதல் வந்துவிடுகிறது. 3 மாதம் காலம் முடிவடைந்த பிறகு இயக்குனரை சந்திக்க நாயகன், நாயகியுடன் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறான். அங்கு போனவுடன் இயக்குனர் சும்மாதான் உன்னை அவ்வாறு நடிக்கச் சொன்னேன். உன்னை என்னுடைய படத்தில் நடிக்கவைக்க முடியாது என்று சொல்கிறார். இதனால், மனவேதனையுடன் திரும்புகிறார் நாயகன்.

பின்னர் சொந்த ஊருக்கும் திரும்பும் இருவருக்கும் திருமணம் செய்துவைக்க நாயகனின் பெற்றோர் முடிவெடுக்கின்றனர். அதன்படி, இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெறுகிறது. திருமணத்துக்கு 3 நாட்கள் முன்னதாக, நாயகனுக்கு பாராட்டு விழா நடக்கிறது. அதில், இயக்குனர் 3 மாதம் காலம் நாயகன் பைத்தியமாக நடித்ததை போட்டு உடைத்து விடுகிறார். இதை கேட்கும் நாயகி தனது லட்சியத்தை நாயகன் கெடுத்துவிட்டார் எனகூறி அங்கிருந்து வெளியேறி, நாயகனை பிரிகிறார்.

அதன்பின்னர், நாயகன் என்னவானார்? இவர்களது திருமணம் நடந்ததா? நாயகியின் லட்சியம் நிறைவேறியதா? என்பதே மீதிக்கதை.

 

  13 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்-முருகதாஸ் மோதல் உறுதி?
சச்சின் பல கோடி கனவுகள்-திரைவிமர்சனம்!
தொண்டன் திரைவிமர்சனம்!
ரஜினியின் காலா பட தலைப்பின் அர்த்தம் என்ன தெரியுமா?
ரசிகர்களுக்கு ரஜினி எச்சரிக்கை -
மோசமான சாதனைகளில் அஜித்தின் இரண்டு படங்கள்
காலா டைட்டிலில் இதை கவனித்தீர்களா, இதெல்லாம் என்ன குறியீடு தெரியுமா?
விஜய் மகன் புகழை தடுத்த விஜய் – கண்டிக்கத்தக்கது
விவேகம் படத்தில் ஒரு காட்சி வரும்பாருங்க, செம மாஸ்- படத்தை பற்றி காஜல் அகர்வால் கூறிய சுவாரஸ்யம்
கைதாவாரா நடிகர் சூர்யா?: தப்பிக்க வழி இருக்கிறதா?