Home  |  திரை உலகம்

தீயா வேலை செய்யணும் குமாரு ( Theeya Velai Seiyyanum Kumaru )

தீயா வேலை செய்யணும் குமாரு ( Theeya Velai Seiyyanum Kumaru )

Movie Name: Theeya Velai Seiyyanum Kumaru தீயா வேலை செய்யணும் குமாரு
Hero: SIDDHARTH
Heroine: HANSIKA MOTWANI
Year: 2013
Movie Director: SUNDAR C
Movie Producer: UTV MOTION PICTURES
Music By: C. Sathya


கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா என்று தலைமுறை, தலைமுறையாக காதலித்தே திருமணம் செய்து கொள்ளும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஹீரோ குமார், தனக்கென்ற ஒரு ஹீரோயின் கிடைக்காமல் இருக்கிறார்.. அவர் வேலை பார்க்கும் ஐடி நிறுவனத்திலேயே வேலைக்குச் சேரும் ஹீரோயினை பார்த்தவுடன் காதலிக்கத் துவங்குகிறார். அந்தக் காதலுக்கு நோக்கியா கம்பெனி ஓனர் சந்தானம் ஹெல்ப் செய்கிறார்.. இந்த உதவி இறுதிவரையில் தொடர்ந்து சென்று இவர்களது காதல் எப்படி ஜெயிக்கிறது என்பதுதான் மிச்ச மீதிக் கதை..! சித்தார்த் மென்மேலும் தேறி வருகிறார்..

சாக்லேட் பாயாகத் துவங்கி, கொஞ்சம் ஆக்சன் ஹீரோவாக ஆனவருக்கு இப்போது காமெடியும் நன்றாகவே வருகிறது..! சந்தானத்திடம் டிரெயினிங் எடுக்க அவர் படும் பாட்டையும், அதற்காக அப்பாவித்தனமாக அவர் சொல்லும் பதில்களும் நடிப்போடு சேர்ந்தே நம்மைக் கவர்கிறது.. பப்ளிமாஸ் மாதிரி இருந்துக்கிட்டு ஹீரோயின் வேஷம் கட்டியிருக்கும் ஹன்ஸிகா பல்லு போன கிழடுகளையெல்லாம் கொஞ்சம் உசார் படுத்தியிருக்கிறார்..! படம் முழுவதும் இவரது இளமையை எப்படியாவது எந்தக் கோணத்திலாவது வெளிப்படுத்திவிட வேண்டும் என்று நினைத்து இயக்குநரும், காஸ்ட்யூம் டிஸைனரும் இயக்குநரின் மனைவியுமான திருமதி குஷ்பூவும. மெலடி பாடல்களில் சிக்கென்ற உடையில் வருவதைப் பார்த்து நமக்குத்தான் பக்கென்று இருக்கிறது..! தெலுங்கு மணவாடுகளுக்கு ஹன்ஸிகாவே ஏன் பிடிக்கிறது என்பதற்கு இந்தப் படமும் ஒரு சாட்சி..

நடிப்பு வருமா என்றவர்களுக்கு கணேஷ்வெங்கட்ராமனிடம் கிளப்பில் மென்மையான வாய்ஸில் பேசி காதலை கட் செய்யும் அந்தக் காட்சியை உதாரணத்துக்குச் சொல்லலாம்..! சந்தானம் இதில் உண்மையாகவே நடித்திருக்கிறார். முதலில் சேர்த்து வைத்துவிட்டு பின்பு பிரிக்க வைக்கத் துவங்கும் காட்சியில் ஆரம்பிக்கிறது அண்ணனின் ஆட்டம்.. பெத்த அப்பனுடன் நடுரோட்டில் மல்லுக்கட்டும் காட்சியில் டயலாக் டெலிவரியிலும் கோபத்திலும், ஆத்திரத்திலும் அவர் பேசும் பேச்சுக்கள் நகைச்சுவையைக் காட்டிலும் ஒரு சுவாரஸ்யத்தைக் கொடுத்தது..! சித்தார்த்தின் வீட்டில் தங்கிவிட்டு காலையில் அவர்கள் செய்யும் டிராமாவை பார்த்து நம்ப முடியாமல் “விக்ரமன் ஸார் படம் மாதிரியிருக்கு” என்று சொல்லும் சந்தானத்தை ரொம்பவே பிடிக்கிறது..! அண்ணனின் நோக்கியோ கம்பெனி மாதிரி ஊருக்கு நாலு பேர் இருக்கத்தான் செய்றானுக..

படத்தின் மிகப் பெரிய பலமே திரைக்கதைதான்.. கணேஷ்வெங்கட்ராமன்-ஹன்ஸிகாவை பிரிக்க வேண்டி சந்தானம் சொல்லும் ஐடியாவும்.. சித்தார்த்துக்கு அவர் கொடுக்கும் டிரெயினிங்கும் படு சுவாரஸ்யமானவை.. காட்சியே நகைச்சுவையாக இருக்கும்பட்சத்தில் வசனம்கூட இரண்டாம்பட்சம்தான்.. இதில் திரைக்கதைக்காகவே இரண்டாம் பாகத்தை மட்டும் இன்னொரு வாட்டி பார்க்கலாம் போல தோணுது..! இது போன்ற நகைச்சுவை படங்களுக்கு பாடல்களையும் நகைச்சுவையாகவே போடலாம் என்று நினைத்தார்களோ..

சத்யாவின் இசை அப்படியொன்றும் கவரவில்லை..! ஆனால் சந்தானம்-ஹன்ஸிகா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகளில் ஓட்டியிருக்கும் பின்னணி இசை மட்டுமே கவர்கிறது..! நன்று..! கணேஷ் வெங்கட்ராம், திவ்யதர்ஷிணி, பாஸ்கி, பாலாஜி, சித்ரா லட்சுமணன், ஹன்ஸிகாவின் தோழி என்று பலரும் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு நடிப்பைக் கொட்டியிருக்கிறார்கள். அனைத்துமே நகைச்சுவை என்பதால் இது அவர்களது நடிப்பு கேரியரில் முக்கியமான படமாக இல்லாமல் போனதுதான் அவர்களுடைய துரதிருஷ்டம். இன்னொரு சந்தோஷம்.. வழக்கு எண் படத்தில் நடித்த ரித்திகா சீனிவாஸை கொஞ்சம் குளோஸப்பில் அடிக்கடி காட்டி ஸ்கிரீனை அழகு செய்திருக்கிறார்கள்.

  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்