Home  |  திரை உலகம்

தீக்குளிக்கும் பச்சைமரம் ( Theekulikkum Pachaimaram )

தீக்குளிக்கும் பச்சைமரம் ( Theekulikkum Pachaimaram )

Movie Name: Theekulikkum Pachaimaram தீக்குளிக்கும் பச்சைமரம்
Hero: PRAJIN
Heroine: Sarayu Starrer
Year: 2013
Movie Director: Vineesh- Prabheesh
Movie Producer: Millennium Visual Media
Music By: Jithin Roshan

விவசாயம் காரணமாக்கி அப்பா நிழல்கள் ரவி எடுக்கும் விபரீத முடிவு சின்ன வயதிலேயே நாயகர் பிரஜனை அனாதையாக்குகிறது. சித்தி கொடுமை, செய்யாத திருட்டுக்காக சிறுவர் சீ்ர்திருத்தப்பள்ளி தண்டனை, என வாழ்க்கை திசைமாறும் பிரஜன், சிறுவர் சீர்திருத்த பள்ளியை விட்டு வெளியேவந்ததும் நேர்மையாக வாழ முடிவெடுத்து தன் ஊருக்கு வருகிறார். அங்கு பிரஜனுக்கு, அவர் அப்பா நிழல்கள் ரவியிடம் வேலை பார்த்தவர் அடைக்கலம் கொடுக்கிறார். ஒரு கட்டத்தில் அடைக்கலம் கொடுத்தவரும் இறந்துவிட அவரது வயதுக்கு வந்த மகள்களை பாதுகாக்கும் பொறுப்பும் பிரஜனுக்கு ஏற்படுகிறது.

இரண்டு மகள்களில் இளைய மகளை திருமணம் செய்துகொள்ளும் பிரஜன், வறுமையை துரத்த, வாழ்க்கையை நடத்த அந்த ஊர் அரசு மருத்துவமனையின் பிணவறையில் அங்கீகரிக்கப்படாத உதவியாளராகிறார். அந்த மருத்துவமனையில் விபத்தில் சிக்கி உயிரோடு வருபவர்கள் உறுப்புகளுக்காக பிணமாக்கப்படுவதையும் பிணமாக வரும் இளம் பெண்களின் உடலில் உயர் அதிகாரிகள் சிலர் உயிர் கொடுக்க முயற்சித்து தங்கள் இச்சையைத் தீர்த்துக் கொள்வதையும் பார்த்து பொங்கி எழுகிறார் பிரஜன். அதனால் அவரும் அவரது அழகிய குடும்பமும் ஈடு செய்ய முடியாத இன்னல்கள்தான் ‘தீக்குளிக்கும் பச்சைமரம்’ கதை மொத்தமும்.கறைபடிந்த பற்கள், பரட்டை தலை, அழுக்கான ஆடை, சோகமயமான முகம் என கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் பிரஜன்.

பிணவறையில் பிணங்களை கூறுபோடும் தொழில் கற்கும்போது அவர் படும் அவஸ்தைகளும் அதனால் மெல்ல மெல்ல போதை வஸ்துகளுக்கு அடிமையாகும் காட்சிகளும் யதார்த்தம். கதாநாயகி பிரயூவுடனான பிரஜனின் காதலும் கல்யாணமும் குடியும் குத்தனமும் சாமானியர்களின் வாழ்க்கையை சொல்லும் விதத்தில் படம் பிடிக்கப்பட்டிருப்பது பாராட்டுதலுக்குரியது. சந்திரிகாவாகவே வாழ்ந்திருக்கிறார் பிரயூ. கணவன் கண் எதிரே பிணவறையில் அவருக்கு நிகழும் கொடூரம் எந்தப் பெண்ணுக்கும் எந்த ஜென்மத்திலும் நிகழ்ந்துவிடக் கூடாது என்னும் ரீதியில் ரசிகர்களை துடிக்க வைத்திருக்கும் விதம் நன்று.  16 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்