Home  |  திரை உலகம்

தலைவா ( Thalaivaa )

தலைவா ( Thalaivaa )

Movie Name: Thalaivaa தலைவா
Hero: VIJAY
Heroine: AMALA PAUL
Year: 2013
Movie Director: A.L.VIJAY
Movie Producer: Sri Mishri Production
Music By: G.V.PRAKASH KUMAR

மும்பையில் தமிழர்களை காப்பாற்றுவதையே தன் தொழிலாக செய்து வருகிறார் சத்யராஜ். இவரது பிள்ளைதான் விஜய். அவனுக்கு எதற்கு நம்ம வேலை என்று ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைக்கிறார் சத்யராஜ். இவர் அங்கே தண்ணீர் பாட்டில் விற்கிறார். சாலையில் பட்டாம்பூச்சி பிடிக்க கிராஸ் ஆகும் அமலாபால் இவர் கண்ணில் விழுந்துவிட, காதல். அங்கு ஒரு டான்ஸ் காம்படிஷனில் வெற்றி பெற துடிக்கிறார்கள் இருவரும். அந்த நேரம் பார்த்து கீழே விழுந்து காலை முறித்துக் கொள்ளும் அமலா, ஒரு காலை மட்டும் ஆட்டாமல் விஜய்யோடு ஆடி? வாங்க உங்க அப்பாட்ட சம்பந்தம் பேசலாம் என்று அமலாவும், அவரது அப்பா சுரேஷும் விஜய்யை அழைத்துக் கொண்டு மும்பை வருகிறார்கள்.

\அங்குதான் தெரிகிறது விஜய்க்கு அப்பா யார், அவர் செய்யும் தொழில் என்னவென்று. அதைவிட பேரதிர்ச்சி அவருக்கு. கூடவே வந்த அமலாவும் சுரேஷும் மும்பையின் போலீஸ் அதிகாரிகள் என்பது. சத்யராஜ் கொல்லப்பட, ‘அண்ணா’ விட்டுவிட்டு போன கடமை கண்ணியம் கட்டுப்பாடு இம்மூன்றையும் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறார் அவரது பிள்ளையான விஜய். விஜய்யின் கம்பீரத்திற்கும் மாஸ்சுக்கும் ஏற்ற தலைப்புதான். பல இடங்களில் அசர வைக்கிறார் அவரும். ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை போல ஆடும் அதே விஜய்தான் மும்பையிலிருக்கிற சின்ன அண்ணாவா என்கிற டவுட் படத்தில் வரும் சந்தானத்துக்கு வருகிற மாதிரியே நமக்கும் வருகிறது.

உயிர் போகிற வலியிலும், ஒரு கையால் அமலாவை விரட்டுவதுமாக பிரமாதப்படுத்துகிறார். பிக்பாக்கெட் திருடனை தேடி செல்லும் அந்த ஒரு காட்சியில் விஜய்தான். அமலாபால் ஒரு போலீஸ் அதிகாரி என்பதை ஜீரணித்துக் கொள்வதற்குள் படமே முடிந்து போகிறது. அவ்வளவு தடித்தடியான ஆபிசர்களுக்கு மத்தியில் அமலாபால் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு பேசும்போதெல்லாம்,... சத்யராஜுக்கு ஏற்ற வேடம் பல வருஷங்கள் கழித்து கிடைத்திருக்கிறது அவருக்கு. ரொம்பவே ஷட்டில் ஆக நடித்திருக்கிறார். இவருக்காக வசனம் எழுத சில பேப்பர்கள் மட்டும் போதுமானதாக இருந்திருக்கும். ஆனால் பக்கம் பக்கமாக பேச வைக்கிறது அவரது நடிப்பு. இவருக்கான கெட்டப்பும் விசேஷம். அந்த வெள்ளை ஜிப்பா, சிவப்பு சால்வை. ஜி.வி.பிரகாஷின் இசையில் சில பாடல்கள் கேட்சிங். நீரவ்ஷாவின் ஒளிப்பதிவில் படத்தில் வில்லன்கள் கூட அழகாக தெரிகிறார்கள்.

   17 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்