Home  |  திரை உலகம்

தலைவா திரை விமர்சனம் !

நடிகர் : விஜய்

 

நடிகை : அமலாபால்

 

காமெடி : சந்தானம்

 

பிற நடிகர்கள் : சத்யராஜ், பொன்வண்ணன், ராஜீவ் பிள்ளை

 

இயக்கம் : ஏ.எல் விஜய்

 

ஒளிபதிவு : நிரவ்ஷா

 

இசை : ஜிவி.பிரகாஸ்

 

 

முதன்முதலாக இயக்குனர் விஜய் இயக்கத்தில், இளையதளபதி விஜய் நடிக்கும் படம் தான் தலைவா. இந்த படம் தமிழகத்தில் பல்வேறு அரசியல் காரணங்களால் வெளியாகவில்லை என்றாலும், பல்வேறு நாடுகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

 

மும்பையில் சத்யராஜ் அறிமுகத்துடன் படம் ஆரம்பிக்கிறது. அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடனக்குழு நடத்தும் விஜய் ஆரவாரத்துடம் அறிமுகமாகிறார். மேலும் காமெடி ஹீரோ சந்தமும், அம்லாபாலும் அறிமுகமாகிறார்கள். விஜயின் தந்தையாக வரும் சத்யராஜ் மும்பை மக்களுக்கு நல்லது செய்து வாழ்கிறார். இதை பிடிக்காத வில்லன் குரூப் சத்யராஜை கொன்றுவிடுகிறது. இதனை அடுத்து ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வரும் விஜய் தந்தையின் இடத்தில் இருந்து மக்களுக்கு நல்லது செய்கிறார். இதற்கு தடையாக இருக்கும் வில்லன் கூட்டத்துடன் மோதி மக்களுக்கு எப்படி தலைவனாகிறார் என்பதை காமெடி, சண்டை, காதல் ஆகியவற்றுடன் கலந்து கொடுத்திருக்கும் படம் தான் தலைவா.

 

பலம் :

 

1. நடிகர் விஜயின் கேஷ்வல் நடிப்பும், அதிரடியான ஆட்டமும், தலைவராக அவரது நடவடிக்கையும் படத்திற்கு பலம் சேர்க்கிறது.

 

2. சத்யராஜ் தனது கம்பீரமான நடிப்பின் மூலம், திரையில் பிரமிப்பை ஊட்டுகிறார்.

 

3. ஒளிபதிவாளர் நிரவ்ஷா வின் கலைவண்ணம் ஒவ்வொரு கட்சிகளிலும் மிளிர்கிறது.

 

4. வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலும் அதற்கான நடனமும் கவர்கின்றன.  

 

பலவீனம் :

 

1. படத்தின் முதல் பாதி காமெடி, காதல், சுவாரஸ்யம் என நகர்ந்தாலும், இரண்டாம் பாதி மனதில் இடம்பிடிக்காத வில்லன், இரண்டாவது கதாநாயகி, என விறுவிறுப்பு தேய்கிறது. ஆனால் இறுதி காட்சிகளில் இயக்குனர் விஜய் தனது அறிவு சார்ந்த திறமையை நிருபித்துள்ளார்.

 

2. ஹீரோயின் அமலா பாலுக்கு படத்தில் ஒரு வேலையும் இல்லை. அவரும் பார்க்க ரொம்ப சுமாராகத்தான் இருக்கிறார்.

 

3. மர்ம முடிச்சுகளை அவிழ்க்க இப்படம் அதிக நேரம் எடுத்துகொள்கிறது. ஒரு கட்டத்தில் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறது.

 

தீர்ப்பு :

 

மொத்தத்தில் "தலைவா" வெறும் பொழுதுபோக்கு படமாக மட்டும் இல்லாமல், நல்ல கருத்துக்கள் நிறைந்த வித்தியாசமான படமாகவும் உலக திரையரங்குகளில் வலம் வருகிறது.

  
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்