Home  |  திரை உலகம்

தகராறு ( Thagaraaru )

தகராறு ( Thagaraaru )

Movie Name: Thagaraaru தகராறு
Hero: ARULNITHI
Heroine: POORNA
Year: 2013
Movie Director: Ganesh Vinaayac
Movie Producer: CLOUD NINE MOVIES
Music By: DHARAN


அருள்நிதி, பவன் உள்ளிட்ட நான்குபேர் நண்பர்கள். பகலிலேயே வீடு புகுந்து திருடுவது அவர்களின் தொழில். போலீஸ் இன்ஸ்பெக்டரின் வீட்டிலேயே திருடிவிட, இன்ஸ்பெக்டருடன் இவர்களுக்கு தகராறு. ஒரு லோக்கல் தாதாவிடம் மோதியதால் அவருடனும் தகராறு. கந்துவட்டி தாதாவின் பெண்ணான பூர்ணா-அருள்நிதி காதலால், கந்துவட்டி தாதாவுடனும் தகராறு. திடீரென அருள்நிதியின் நண்பர்கள் மேல் நடக்கும் கொலை முயற்சியில், ஒரு நண்பன் கொல்லப்படுகிறார். அதைச் செய்தது யார்?????படத்தின் முதல் காட்சியிலேயே கொலை விழுகிறது.

புதுப்புது டெக்னிக்களுடன் திருடுவது சுவாரஸ்யமாக இருக்கிறது. லாரியில் அடிபட்டுக்கிடக்கும் பூர்ணாவை அருள்நிதி காப்பாற்றும் காட்சி அருமை. இருவருமே அடுத்தவர் முகத்தை மறந்துவிட, உன்னை எங்கேயே பார்த்திருக்கேனே என்று படம் முழுக்க யோசித்துக்கொண்டே இருப்பது யதார்த்தம்.மூன்று தகராறுகளில் சிக்குவதை இடைவேளைக்கு முன்பே சொல்லிவிட்டு, இடைவேளைக்குப் பின் சஸ்பென்ஸ் த்ரில்லர் போன்று கொண்டுபோகிறார்கள். த்ரில்லர் கதையில் சஸ்பென்ஸை உடைப்பது ஒரு கலை. இங்கே கொலையாளியே நேராக வந்து நின்று கொண்டு ‘ஆமாண்டா..நாந்தான் கொன்னேன்’ என்று சொல்லும்போது ஒன்னுமில்லாமல் ஆகிறது. அவர் தான் கொலையாளி என்பதற்கு படத்தில் முதலில் இருந்தே நிறைய க்ளூ இருக்கிறது.அருள்நிதி எப்போதுமே வித்தியாசமான கதைகளைத் தேடி தேர்ந்தெடுப்பவர். இதிலும் அப்படியே. வழக்கமான கதை/படம் என்று ஒதுக்கிவிட முடியாது இதை. இதில் கலகல பார்ட்டியாக வருகிறார். பூர்ணாவை விரட்டி விரட்டி லவ் பண்ணும்போது, செம கலகலப்பு. பூர்ணா மதுரைப் பெண்ணை கண்முன்னே கொண்டுவருகிறார். ஒரு கந்துவட்டி பார்ட்டியின் மகளாக, காலேஜ் ஸ்டூடண்ட்டாக, பிடிவாதக்காரராக, ஹீரோவின் காலைப்பிடித்து காதலுக்காக கெஞ்சுபவராக என நடிப்புக்கு தீனி போடும் கேரக்டர். கலக்கியிருக்கிறார்.


கதையே நான்கு நண்பர்களைப் பற்றியது தான் என்பதால், நான்கு பேருமே ஹீரோக்களாக வருகிறார்கள். அருள்நிதிக்கு ரொமான்ஸ் என்றால், பவன் மற்றும் கொலையாகும் நண்பர்களுக்கு ஆக்சன், தனி வாய்ப்பு கொடுத்தே எடுத்திருக்கிறார்கள். காமெடியன் முருகதாஸ் தான் கவனிக்கப்பட வேண்டிய நடிகர். தகராறினால் தான் கொலை என்று படம் நகர்கிறது. ஆனால் மூன்று தகராறுமே இவர்களே வலிய இழுத்ததாகவே இருக்கிறது. பின்னர் அதனாலெயே கொலை எனும்போது, இவர்கள் மேல் பரிதாபம் வருவதற்குப் பதில் கொஞ்சம் எரிச்சலே வருகிறது. கொலையாளி ஒத்துக்கொண்டதில் இருந்து இறுதிவரையான காட்சிகள் ஏமாற்றத்தையே அளித்தன. என்ன தான் சொல்ல வர்றாங்க என்று தோன்றிவிட்டது. இன்ஸ்பெக்டர் கேரக்டரை வடிவமைத்த விதம். நல்லவரென்றால் கொலையாளியை கண்டுபிடிக்க உதவியிருக்கலாம். கெட்டவரென்றால் கொலையாளியாக அவரே இருக்கலாம். கிளைமாக்ஸை முடித்துவைப்பதற்கென்றே உருவானவர் மாதிரித் தெரிந்தது. வித்தியாசமான, நல்ல முயற்சி. கிளைமாக்ஸில் சொதப்பினாலும் சூப்பர். சத்யா பிண்ணனி இசை மற்றும் பவன் மற்றும் பூர்ணா கேரக்டர்.,, நட்பின் அருமையை சொல்லும் கதை இப்படி எல்லாமே சூப்பர் குட்.

 

  18 Jun 2015
User Comments
No Comments found.
Post your comments
Name *  
Email *  
Reviews *  
(Maximum characters: 300)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
 More like this
விஜய்யின் மெர்சல் படத்திற்காக தன் பட ரிலீஸ் தேதியை மாற்றிய பிரபல நடிகர்
தல 58 குறித்து வந்த தகவல்- உண்மை இது தான்
அஜித்-ஷங்கர் கூட்டணி? நமக்கு கிடைத்த உண்மையான தகவல் இதோ
அனிதா குடும்பத்தினரிடம் விஜய் சொல்லிவிட்டு வந்த அந்த ஒரு வார்த்தை..!
இனிமேலும் அப்படியே விடுவது சரியாகாது..! – அஜித் எடுத்த அதிரடி முடிவு
விவேகம் விமர்சனம் குறித்து முருகதாஸ் பதில்
விஜயின் நடனத்துக்கு ரசிகரா நீங்கள் – அப்போ எந்த செய்தி உங்களுக்குத்தான்..
விவேகம் கற்றுகொடுத்த பாடம் – மெர்சல் படக்குழுவின் மெர்சல் ஐடியா..!
விவேகம் திரைப்படம் குறித்து மறைக்க படும் உண்மைகள் - அதிர்ச்சி தகவல்
மருத்துவமனையில் அஜித்- ரசிகர்கள் வருத்தம்